கொரோனா சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்காக பித்யேக மருந்தை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி வைத்துள்ளார். 

திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் கடந்த 2-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. சிறுநீரக கோளாறு, தீவிர மூச்சு திணறல் காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் 90 சதவீதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த 2 நாட்களில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு 40 சதவீத ஆக்சிஜன் மட்டும் செலுத்தப்பட்டு வந்த நிலையில், திங்கட்கிழமை மாலை முதல் மீண்டும் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறுநீரக கோளாறு மோசமடைந்தது மட்டுமின்றி, இதய செயல்பாடும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.அன்பழகனுக்கு ரத்த அழுத்தத்தை சீராக வைக்க மருந்துகள் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. திமுக ஜெ.அன்பழகனின் உடல்நலம் அறிந்து, கொரோனாவுக்கான முக்கிய மருந்தை ஹைதராபாத்திலிருந்து அனுப்பி வைத்துள்ளார் கவர்னர் தமிழிசை. அன்பழகனின் உடல்நிலை குறித்து அறிந்த, தெலுங்கான கவர்னரும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்திரராஜன், ஹைதராபாத்தில் இருந்து கரோனாவுக்கான முக்கிய மருந்தினை வாங்கி ரேலா மருத்துவமனைக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார்.

 

கொரோனாவுக்கான முதல் மருந்து கண்டுப்பிடிப்பை ஹைதராபாத் கண்டறிந்துள்ளது. அந்த மருந்தினைத்தான் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தரப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஹைதராபாத்திலுள்ள காந்தி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தினைத்தான் தெலுங்கானா அரசு கொடுத்து வருகிறது. அமெரிக்க மற்றும் இத்தாலி நாடுகளில் இந்த மருந்தினை மருத்துவ வல்லுநர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில்தான், ரேலா மருத்துவமனை நிர்வாகம் வைத்த கோரிக்கையினை ஏற்று உடனடியாக அந்த மருந்தினை அனுப்பி வைத்து உதவி செய்துள்ளார் கவர்னர் தமிழிசை செளந்தரராஜன்.

மாற்றுக் கட்சியில் இருந்தாலும் சகோதரியுள்ளம் படைத்தவர் என்பதை தமிழிசை சவுந்தரராஜன் இந்த சம்பவத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.