Asianet News TamilAsianet News Tamil

குஷ்பூவோட டங்க் ஸ்லிப்பாகிடுச்சு..! மத்தபடி அவங்க ரொம்ப்ப்ப்ப்ப்ப நல்லவங்க... அடடே அழகிரி! எக்கச்சக்க எரிச்சலில் ஸ்டாலின்..!

கருணாநிதிக்கு களங்கம் செய்யும் நோக்கிலோ பேசியிருக்கவில்லை. இதனால் நாங்கள் இதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.” என்று தடாலடியாக சொல்லியிருக்கிறார். குஷ்பூ மீது ராகுல் கடும் நடவடிக்கை எடுப்பார்! என ஸ்டாலின் நம்பியிருந்த நிலையில், அப்படியொன்றுமே நடக்காது எனும் பொருள் படும் வண்ணம் கே.எஸ்.அழகிரி சொல்லியிருப்பது ஸ்டாலினை பெரியளவில் எரிச்சல் படுத்தியுள்ளது.

DMK MK Stalin tension
Author
Tamil Nadu, First Published Feb 19, 2019, 2:27 PM IST

தி.மு.க.வை குஷ்பூ பிரிந்து பல மாதங்களாகி வருடங்களாகிவிட்டன. ஆனாலும் அந்த கட்சியை  பற்றி ஏதாவது இவர் கமெண்ட் அடிப்பதும், அதற்கு கன்னாபின்னாவென ரியாக்‌ஷன்கள் கிளம்புவதும் வாடிக்கை. அதிலும் சமீபத்தில் ‘கருணாநிதி தமிழர் இல்லை’ என்று குஷ்பு கொளுத்திப்போட்ட சரவெடி தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் உள் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை உருவாக்கியது. 

’கருணாநிதியை குஷ்பு இழிந்து பேசிவிட்டார், உலக தமிழர்களால் ‘தமிழின தலைவர்’ என்று கொண்டாடப்படும் தலைவரை, மோசமாக அதுவும் அவரது இறப்பிற்குப் பின் இப்படி குஷ்பூ பேசியதை சகித்துக் கொள்ளவே முடியாது. உலகம் உள்ளவரை எங்கள் கழகம் இருக்கும், கழகம் உள்ளவரை தமிழின தலைவர் கலைஞரின் புகழ் இருக்கும், அப்பேர்ப்பட்ட தலைவரை இழிவுபடுத்திய குஷ்பு இருக்கும் காங்கிரஸூடன் வெறும் அரசியலுக்காக நாங்கள் இருக்கவேண்டிய அவசியமில்லை.’ என்று ஸ்டாலின் சார்பாக பிரதிநிதி ஒருவர் ராகுலின் நேரடி உதவியாளரிடம் கொதித்து வெடித்துவிட்டார்.

 DMK MK Stalin tension

இது இப்படியிருக்க, ‘குஷ்பூ சொல்லியதில் தவறேயில்லை. கோபாலபுரத்துக்கே அந்த உண்மை தெரியுமே!’ என்று நாம் மக்கள் கட்சியின் தலைவர் சீமான் வேறு அந்த கருத்தை மேலும் வலுவாக்கி தி.மு.க.வை மேலும் சீண்டினார். இதன் மூலம் இந்த பிரச்னை முடிவடைந்துவிடாமல் தொடர்ந்தது.  இதெல்லாம் போதாதென்று, தன் பதவி பறிப்பிற்கு குஷ்பூவும் ஒரு காரணம்! என்று அவர் மீது கடும் கோபத்திலிருக்கும் திருநாவுக்கரசரும் ‘தேர்தல் நேரத்தில் கருணாநிதியை குஷ்பூ இழிவு செய்திப்பது நம் கூட்டணிக்குள் குழப்பத்தை உருவாக்கி, தேர்தல் வெற்றியை பாதிக்கும்.’ என்று ராகுலுக்கு ஸ்பெஷல் மெயில் தட்டினார். DMK MK Stalin tension

இப்படியாக சூழல்கள் போய்க் கொண்டிருக்கும் நிலையில், கருணாநிதிக்கு எதிரான குஷ்பூவின் சீண்டல் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தமிழக காங்கிரஸின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி....”குஷ்பூ அப்படி பேசியிருப்பாரா என்பதிலேயே எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் அப்படி பேசியிருப்பது உண்மை என்றாலுமே கூட அது அவரது டங்க் ஸ்லிப்பாகி (நாக்கு தவறி வந்த வாக்காம்) வந்திருக்கலாம். ஏதோ பேச்சுவாக்கில் அப்படி சொல்லியிருப்பார். கருணாநிதி மீது குஷ்பூவுக்கு அளவு கடந்த பிரியம் உண்டு. DMK MK Stalin tension

அதனால் அவர் எந்த உள்நோக்கத்தோடு, கருணாநிதிக்கு களங்கம் செய்யும் நோக்கிலோ பேசியிருக்கவில்லை. இதனால் நாங்கள் இதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.” என்று தடாலடியாக சொல்லியிருக்கிறார். குஷ்பூ மீது ராகுல் கடும் நடவடிக்கை எடுப்பார்! என ஸ்டாலின் நம்பியிருந்த நிலையில், அப்படியொன்றுமே நடக்காது எனும் பொருள் படும் வண்ணம் கே.எஸ்.அழகிரி சொல்லியிருப்பது ஸ்டாலினை பெரியளவில் எரிச்சல் படுத்தியுள்ளது. தான் இவ்வளவு சொல்லியும், ராகுல் கேட்காத இந்த கோபத்தை சீட் ஒதுக்கீட்டில் நிச்சயம் ஸ்டாலின் காட்டுவார்! என்கிறார்கள். DMK MK Stalin tension

இது ஒருபுறமிருக்க, “திருநாவுக்கரசரை அகற்றியதன் மூலம் தன்னை தேடி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி எனும் ஜாக்பாட் திடீரென தேடி வந்ததற்கு குஷ்பூவும் முக்கிய காரணம்! என்பதாலேயே அவருக்கு அணுசரனையாக இருக்கும் கே.எஸ்.அழகிரி, அதற்காக கூட்டணி தலைவனான தி.மு.க.வையே கடுப்பேற்றும் அளவுக்கு நடந்து கொள்வது தவறு! எனவே ராகுல்ஜி இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு சிறிய அளவிலாவது ஒழுங்கு நடவடிக்கை ஒன்றை குஷ்பூ மீது எடுத்து, ஸ்டாலினை சமாதானப்படுத்த வேண்டும்! என்று எதிர்கோஷ்டியினர் உசுப்பி வருகிறார்கள். ஜெயிக்க போவது ஸ்டாலினா? குஷ்பூவா?

Follow Us:
Download App:
  • android
  • ios