Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவுக்கு செக் வைத்த ஸ்டாலின்! கார் ஏறினாலே கைதாம்ல?: எக்கச்சக்க மகிழ்ச்சியில் எடப்பாடி

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தங்களுக்கு எதிராக விஸ்வரூபமெடுக்க துவங்கிய போது கருணாநிதிக்கு பெரும் எரிச்சலாக இருந்தது ஜெ.,வோடு பக்க பலமாக நின்ற சசிகலாவை பார்த்துதான். அரசியல் அவதானிப்பில் கில்லியான அவரது எண்ணம் தப்பவேயில்லை. மிகப்பெரிய அளவில் வளர்ந்த ஜெயலலிதாவின் நிழலாக மாறிய சசி, தி.மு.க.வின் முழு கடுப்பிற்கும் ஆளானார். 
 

dmk MK stalin new plan
Author
Tamil Nadu, First Published Dec 30, 2021, 5:26 PM IST

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தங்களுக்கு எதிராக விஸ்வரூபமெடுக்க துவங்கிய போது கருணாநிதிக்கு பெரும் எரிச்சலாக இருந்தது ஜெ.,வோடு பக்க பலமாக நின்ற சசிகலாவை பார்த்துதான். அரசியல் அவதானிப்பில் கில்லியான அவரது எண்ணம் தப்பவேயில்லை. மிகப்பெரிய அளவில் வளர்ந்த ஜெயலலிதாவின் நிழலாக மாறிய சசி, தி.மு.க.வின் முழு கடுப்பிற்கும் ஆளானார். 

dmk MK stalin new plan

ஆனால் ஜெ., மறைவுக்குப் பின் நிலைமை தலைகீழானது. அதிலும் சசி சிறை தண்டனை முடிந்து வந்த பின், அ.தி.மு.க.வை கைப்பற்றிட அவர் செய்த மூவ்களுக்கு தி.மு.க. சப்போர்ட்டாக இருந்ததாக அரசியலரங்கில் பெரிய விமர்சனம் இருந்தது. 
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் சசிகலா பெரிதும் மகிழ்ந்தார். காரணம், அதிகாரத்தை இழந்த எடப்பாடி மற்றும் பன்னீர் டீமை எளிதாக வீழ்த்திடலாம் என்பது அவரது கணிப்பு. அதற்கேற்றார் போல, சசியும் சுதந்திரமாக வலம் வர துவங்கினார். கட்சியின் உறுப்பினராக கூட இல்லாத அவர், தன்னை அக்கட்சியின் பொதுச்செயலாளர்! என சொல்லி கல்வெட்டு வைத்தார். காரில் அக்கட்சி கொடியை கட்டி வலம் வந்தார். தொண்டர்களுக்கு போன் போட்டு பேசி, தன்னை லாஞ்ச் செய்தார். 

dmk MK stalin new plan

இதற்கெல்லாம் எதிராக போலீஸில் அ.தி.மு.க. புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையுமில்லை. அதனால் அ.தி.மு.க.வே ‘சசிகலாவுக்கு சப்போர்ட் செய்கிறது தி.மு.க.’ என்று வெளிப்படையாக விமர்சித்தனர். இந்நிலையில், ஏனோ தி.மு.க.வின் அப்ரோச்மெண்டில் மாற்றம் உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக சசி அப்செட்டாகும் வகையில் நிகழ்வுகள் நடக்கின்றன. எம்.ஜி.ஆர். நினைவு நாளன்று மெரீனாவுக்கு அஞ்சலி செலுத்த வருவதற்கு அவர் கேட்ட அனுமதி ரத்தானது. அதேப்போல், தொண்டர்களை சந்திக்க தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார் சசி. அதற்கும் செக் வைத்திட முடிவாம். அனுமதி கேட்டால், நிச்சயம் மறுக்கப்படுமாம். அதற்கு காரணமாக, ‘கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை’ என்பது காட்டப்படுமாம். 

dmk MK stalin new plan

ஆனால் ‘ஆளுங்கட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை இல்லையே! எனக்கு மட்டும் ஏன் தடை?’ என்று கேள்வி கேட்டு, பயணத்தை துவக்கும் முடிவில் இருக்கிறாராம் சசிகலா. அப்படி செய்தால், காரில் ஏறி கிளம்பினாலே கைது செய்யும் முடிவில் போலீஸ் உள்ளதாக தகவல். 
இப்படியாக சசியை தி.மு.க. முடக்க துவங்கியிருப்பது எடப்பாடியாருக்கு சந்தோஷத்தை தந்துள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios