கடந்த ஆட்சியில் என்ன நடந்தது... உங்களுக்கு தெரியாதா..? ஓபிஎஸ்சை வெளுத்து வாங்கிய செந்தில் பாலாஜி

‘மின்சார கட்டணத்தில் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தியதை மறைத்துவிட்டு மறந்துவிட்டு ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்’ என்று ஓபிஎஸ்சை வெளுத்து வாங்கியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

Dmk minister senthil balaji about aiadmk chief ops and gst bill at kovai

கோவை மாநகராட்சி தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கோவை சாரமேடு பகுதியில் உள்ள நியூ போயஸ் கார்டன் 1 முதல் 7 வரை உள்ள வீதிகளில் 25. 50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கான பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ கோவை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத சாலைகள் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் என கணக்கிடப்பட்டு சாலைகள் அனைத்தும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் புதிய தார்சாலைகளாக அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. 

Dmk minister senthil balaji about aiadmk chief ops and gst bill at kovai

இதற்காக முதலைமைச்சர் 200 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இன்று 3.18 கோடி மதிப்பிலான 7. 01 கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்கான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள சாலைகள் கணக்கிடப்பட்டு புதிய சாலைகள் அமைக்கப்படும். 

கடந்த ஆட்சியில் நிறைய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அப்படி புறக்கணிக்கப்பட்ட பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு புதுபிக்கப்படும். அதிமுக சுவரொட்டி சாதனைகள் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, மோசமான சாலைகள் உள்ளன. மக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் உள்ளன. ஆனால் சீட்டில் சர்க்கரை என எழுதினால் இனிக்காது. உண்மையான சர்க்கரையை நாக்கில் வைத்தால் தான் சுவையை நம்மால் உணர முடியும். 

Dmk minister senthil balaji about aiadmk chief ops and gst bill at kovai

சுவரொட்டி மக்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்காது. செயலில் காட்டவேண்டும். எந்த சாலையாவது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். ஜி.எஸ்.டி நடைமுறை 2017இல் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் இந்த ஆட்சியில் மின்சார கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வசூலிப்பது போல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது கடந்த ஆட்சியில் 2018 ல் கொண்டுவரப்பட்டது. அது அவருக்கு தெரியாமல் போய்விட்டது. இது கடந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான இலவச மின்சார இணைப்பில் மீட்டர் பொருத்தக்கூடிய அந்தப் பணியும் கடந்த ஆட்சியில் 2016 இல் இருந்து நடைமுறையில் உள்ளது. மேலும் தற்போது விவசாயிகளுக்கு வந்த பிரச்சனை போல அறிக்கை வெளியிட்டுள்ளார்.கடந்த ஆட்சியில் மாநகராட்சியில் நிறைய தவறுகள் நடந்து உள்ளது. 

Dmk minister senthil balaji about aiadmk chief ops and gst bill at kovai

அவைகள் கண்டறியப்பட்டு யார் இதுபோன்ற தவறுகளை செய்தார்களோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஓ.பி.எஸ் ஒரு அறிக்கை வெளியிடுவதற்கு முன் கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை தெரிந்து வெளியிட்டிருக்க வேண்டும். அவர்கள் நடைமுறைப்படுத்தியதை மறைத்துவிட்டு மறந்துவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த கால அரசின் மோசமான சூழல் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த ஏழு மாத காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். ஏழு எட்டு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். கடந்த ஆட்சியில் நிதிநிலைமை உட்பட மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.

Dmk minister senthil balaji about aiadmk chief ops and gst bill at kovai

கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளது. நிதிகள் எப்படி சென்றது எங்கு சென்றது என்பதை கோவை மாநகராட்சியில் பார்த்துள்ளோம். குப்பைத்தொட்டி, குப்பை அள்ளும் வாகனங்கள் என அனைத்திலும் முறைகேடு நடந்துள்ளதை மக்கள் தெளிவாக கண்டுள்ளார்கள். தற்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 234 தொகுதியிலும் தளபதி வெற்றி பெறுவார். அப்படி ஒரு மக்களுக்கான ஆட்சி நடைபெறுகிறது. என தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios