ஒன்றிணைவோம் வா என அழைத்து, இப்போது எல்லோரும் நம்முடன் என்கிற திட்டத்தை தொடங்கி வைத்திருக்கும் திமுக தேர்தல் பிரச்சார வியூகர்(..?) பிரஷாந்த் கிஷோரால் உடன்பிறப்புகளின் மானம் சந்தி சிரிக்கிறது. 

கொரோனா நோய்த்தொற்று வந்த புதிதில் உலகமே சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தியபோது ’ஒன்றிணைவோம் வா’ என்கிற முரண்பாடான திட்டத்தை திமுக தேர்தல் வியூகர் பிரஷாந்த் கிஷோர் அறிவுறுத்தலின் பேரின் தொடங்கினார் மு.க.ஸ்டாலின். சில கோடிகளை விளம்பரத்திற்காக வாரி இரைத்தனர்.  இந்தத் திட்டத்தில் பல லட்சம் மக்கள் புகார் தெரிவித்ததாக கூறப்பட்டது. திமுக நிர்வாகிகள், பாதிக்கப்பட்டு புகார் செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியதாகவும், அரசிடம் முறையிட்டதாகவும் கூறப்பட்டது. 

இதில் பயனடைந்தவர்களின் பெயர்களையும் வெளியிட்டது திமுக. ஆனால், பயனடைந்ததாக கூறப்பட்டவர்களோ ‘உண்மையில் திமுகவிடம் நாங்கள் முறையிடவில்லை. எல்லாம் பொய்யான தகவல் என முகத்திரையை கிழித்தனர். அதன் பிறகு அந்தத் திட்டம் திகிடு தத்தோம் என மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட, அமுங்கிப்போனது. 

இப்போது தேர்தல் நெருங்கி வரும்வேளையில் ஆன்லைன் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் திட்டத்தை பிரசாந்த் கிஷோர் சொல்ல, துண்டை அசைக்காமல் அப்படியே அமோதித்திருக்கிறார் ஸ்டாலின். இணைய வழியாக திமுகவிற்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்காக இந்த திட்டத்தை தொடங்கினர். 5 நாட்களில் 1 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தம்பட்டம் அடித்தது திமுக. 6வது நாளில் அதாவது ஒரே நாளில் இந்ததிட்டத்தின் மூலம் புதிதாக 93 பாயிரத்துவ் 308 உறுப்பினர்கள் சேர்ந்ததாக கணக்கு காட்டி உள்ளது திமுக. மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 308 புதிய உறுப்பினர்கள்.

 

இதையெல்லாம் நம்ப முடிகிறதா? என கேள்வி எழுப்புபவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தத் திட்டமும் பித்தலாட்டம் என்பது நிரூபணமாகி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் திமுக இணைய வழி உறுப்பினர் அட்டையை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அட்டையில் பெயர்: டொனால்ட் டிரம் என்றும், தந்தை பெயர் ஃபிரெட் டிரம்ப், வயது 74 என்றும் சட்ட மன்றத் தொகுதி சென்னை எக்மோர் என்றும் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் அட்டையை வழங்கி இருக்கிறது திமுக.

அடுத்து மற்றொரு உறுப்பினர் அடையாள அட்டையில் பெயர்: விவரமறியா வாரிசு,  தந்தை பெயர் மலிவு அரசியல் மன்னர், வயது 44  எனக்கூறி ஆன்லைன் உறுப்பினர் எண்ணையும் வழங்கி இருக்கிறது திமுக.  இதையெல்லாம் தெரியாமல் ஏற்பட்ட தவறு என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் உச்சபட்சமாக இன்னொரு உறுப்பினர் அட்டையில் திமுகவின் இந்தத் திட்டத்தை பித்தலாட்டம் என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கிறது.

 அதாவது திமுக தலவைர் ஸ்டாலினுக்கு சுடலை என்று பெயர் வைத்திருக்கிறனர் அவரை பிடிக்காத மற்ற கட்சி தொண்டர்கள். அந்தப் பெயரிலேயே உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அட்டையில் பெயர்: சுடலை, தந்தை கட்டுமரம், சட்ட மன்றத் தொகுதி கொளத்தூர் ( இது மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏவாக இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி)  என அச்சிடப்பட்டிருக்கிறது. இதுபோன்று எத்தனை போலி உறுப்பினர்கள் எல்லோரும் நம்முடன் திட்டத்தில் சேர்ந்தார்களோ, அல்லது சேர்க்கப்பட்டார்களோ தெரியவில்லை. 

ஆக மொத்தத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் உறுப்பினர்கள் இணைய வழியாக திமுகவில் சேர்ந்ததாக தம்பட்டம் அடிக்கப்பட்டு வரும் நிலையில் இவை அனைத்துமே பித்தலாட்டம் என்பதை நிரூபிக்க இந்த உறுப்பினர்கள் அட்டைகளே உதாரணம். பிரசாந்த் கிஷோரின் திட்டங்கள் எதுவும் உண்லையில்லை என்பது தற்போது ஒன்றிணைவோம் வா, எல்லோரும் நம்முடன் என்பதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.