சட்டசபையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் திமுக உறுப்பினர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சபை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் வாக்கெடுப்பு நடக்கும் என தெரிகிறது.
முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
அப்போது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், உள்ளிட்டோர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தெரிவித்தனர்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் தான் ஜனநாயகம் காக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
ஓபிஎஸ் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார். காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார்.
நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது சபாநாயகர் அறிவித்தார்.
இதையடுத்து சபையில் ரகளை ஏற்பட்டது சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
சட்டசபை ஜமாலுதீன் மேசையின் மீது ஏறி நின்று சபாநாயகர் இருக்கையை சுற்றி நின்று அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகரின் மேசை கீழே சாய்க்கப்பட்டது, மைக் உடைக்கபட்டது.
சபாநாயகரை சுற்றி காவலர்கள் அரண் போல் நின்று கொண்டனர்.
திமுக உறுப்பினர்கள் சபாநாயகரை சுற்றி நின்று கோஷமிட்டனர். இதனால் கோபமுற்ற சபாநாயகர் அவை விட்டு வெளியேற முயற்சி செய்தார்.
அப்போது அவரின் கையை பிடித்து சில திமுகவினர் இழுத்தனர்.
அவரை காவலர்கள் பாதுகாப்பாக மீட்டு அவரது அறைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் சபாநாயகர் அமரும் நாற்காலியில் ஆயிரம் விளக்கு எம்எல்ஏ செல்வம் அமர்ந்தார்.
பின்னர் வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ ப.ரங்கநாதனனும் அமர்ந்தார்.
இதனால் சபையை 1 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
பின்னர் மீண்டும் ஒரு மணிக்கு சபை கூடியது. அப்போதும் சபாநாயகரை சுற்றி நின்று கோஷமிட்டனர்.இதையடுத்து திமுக உறுப்பினர்களை சபையை விட்டு வெளியேற்ற சபை காவலர்களுக்கு சாபாநாயகர் உத்தரவிட்டார்,
அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயலப்ட்டதால் இந்த நடவடிக்கை என்று சபாநாயகர் தெரிவத்தார்.
பின்னர் திமுக உறுப்பினர்களை வெளியேற்றும் முயற்சியில் காவலர்களுக்கும் திமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கபட்டது.
