இந்தியாவைக் காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும் என்று திமுகவினருக்கு வேண்டுகோளை விடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வரப்போகிற 2024ல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தொடங்கிவிட்டனர். தேசிய கட்சிகள் மட்டுமல்ல, மாநில கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகிவிட்டனர். திமுக அதற்கான வேலைகளை துரிதப்படுத்தியுள்ளது. மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. அதே நேரத்தில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது திமுக.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்று சென்னையில் திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்லசேதுபதி இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின், பிறகு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவைக் காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும். நாட்டை காப்பாற்ற தேர்தலுக்கான பணிகளை விரைந்து செய்ய வேண்டும். வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் வெற்றி பெற்றாக வேண்டும். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்காமல் இருந்தாலும், தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக வளர்த்துள்ளோம்” என்று பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதையும் படிங்க..12 மணி நேர வேலை யார் யாருக்கு? எந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்? முழு விபரம்

இதையும் படிங்க..குடும்பத்தினர்களுக்கு மட்டும் டெண்டர்! இலவச லேப்டாப் குளறுபடி.! அதிமுக ஆட்சி பற்றி சிஏஜி அதிர்ச்சி தகவல்.!