திமுக கூட்டணியில் மதிமுக உள்ளதா என்பதை மு.க.ஸ்டாலின் தெளிப்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் ஆக்காமல் ஓயமாட்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சூளுரைத்திருக்கிறார். இந்நிலையில் வைகோ சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசைப் பாராட்டும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, திமுக - மதிமுக இடையில் மீண்டும் பிளவு ஏற்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் திமுக பொருளாளர் சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில் கொள்கை அளவில் ஒத்துப்போவது வேறு, தேர்தல் கூட்டணி என்பது வேறு எனவே இப்போதைக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்பட எந்த கட்சியும் இல்லை என தெரிவித்திருந்தார். இவரது பேச்சு கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய பதில், மதிமுகவினரை காயமடைய செய்துள்ளது என்றும் துரைமுருகன் அவரது பதிலை கூறிவிட்டார், ஸ்டாலின் அவரது முடிவை சொல்லட்டும் என்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதனால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.