வரலாற்று பிழை செய்திட்டிங்களே.. மோடியை நேரடியாக எதிர்க்க துணிவு இல்லாத திமுக.. கிருஷ்ணசாமி விளாசல்..!
மோடியை நேரடியாக எதிர்க்கும் துணிவு இல்லாததால் 'ஊருக்கு இழைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' என்பதற்கு இணங்க ஆளுநரை இலக்காக்கி மோடி எதிர்ப்பாளர்களாக தங்களை சித்தரித்துக் கொள்கிறார்கள்.
ஆளுநர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல, அவர்களும் ஆட்சியின் அங்கம் என்பதை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தும் ஆளுநர் R.N. ரவி அவர்களின் செயல்பாட்டை ஜீரணித்துக்கொள்ள திமுகவினரால் முடியவில்லை என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மாநில ஆளுநர்கள் குறித்து சட்டமன்றங்களில் விமர்சனமோ, விவாதமோ மேற்கொள்ளக்கூடாது என்பது சட்டமன்ற விதி. அந்த விதியை தளர்த்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் விவாதங்களும் திமுக அரசால் வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க;- இடைஞ்சல் தர நினைத்தால் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.! ஆளுநருக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
2017 முதல் 2021 வரை 'Go Back Modi' ட்ரெண்ட் செய்து அரசியல் அறுவடை செய்தவர்கள் இப்பொழுது ‘Welcome Modi' முழக்கமிட்டு, பிரதமரின் மணிக்கட்டு திருகிப் போகிற அளவிற்கு குடும்ப சகிதமாக திடீர் பாசத்தை பொழிகிறார்கள். ஆளுநர்கள் ‘வெறும் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல', அவர்களும் ஆட்சியின் அங்கம் என்பதை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தும் மாண்புமிகு ஆளுநர் R.N. ரவி அவர்களின் செயல்பாட்டை ஜீரணித்துக்கொள்ள திமுகவினரால் இயலவில்லை.
இதையும் படிங்க;- ஆளுநருக்கு எதிராக தீர்மானம்..! முன்னரே அறிந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி அணி-வாக்கெடுப்பில் பங்கேற்காத ஓபிஎஸ்
மோடியை நேரடியாக எதிர்க்கும் துணிவு இல்லாததால் 'ஊருக்கு இழைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' என்பதற்கு இணங்க ஆளுநரை இலக்காக்கி மோடி எதிர்ப்பாளர்களாக தங்களை சித்தரித்துக் கொள்கிறார்கள்.
இந்திய அரசியல் சாசனம் எவருக்கும் சர்வ அதிகாரத்தை வழங்கவில்லை! எல்லா அதிகார அமைப்புக்களும் ‘check and balance’ என்ற உயரிய அடிப்படை தத்துவத்திற்கு உட்பட்டே செயல்படுகின்றன. தமிழக சட்டமன்ற விதிகளை தளர்த்தி ஆளுநருக்கு எதிரான விமர்சனங்களை அனுமதித்தது தவறான முன்னுதாரணமாகும். இதன் மூலம் திமுக வரலாற்று பிழை செய்துள்ளது என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.