முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதுபோல்... 'நான் இல்லையென்றால் கூட அதிமுக நூறாண்டுகள் இருக்கும் அதைப் புரிந்து கொண்டு இன்றைக்கு எடப்பாடி ஒன்றரை கோடி தொண்டர்கள் எல்லோரும் சேர்ந்து வழிநடத்துகிறார்கள் என புகழாராம் சூட்டியிருக்கிறார் அர்ஜூன் சம்பத்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து மக்கள் கட்சி தலைவர் மணிகண்டனை விடுதலை சிறுத்தை கட்சி சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

மணிகண்டனை சந்தித்த பின் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், “ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியல் தான் இருக்கிறார். தகுந்த நேரத்தில் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார். ரஜினிகாந்த் வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவார்.. ரஜினி வழி தனி வழி. லஞ்ச ஊழல் கூட கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை. பாரதிய ஜனதா கட்சியுடன் இணைய வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை. ரஜினிக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. ரஜினிகாந்த் வந்தாருண்ணா அத்தனை கட்சி கூடாரமும் காலியாகி விடும். ரஜினிகாந்த் தான் ஜெயிப்பார்.


தாழ்த்தப்பட்டவர்களை தரையில் உட்கார வைத்து ஆட்சி செய்கிறது திமுக. திமுக பட்டியலின மக்களுக்கு விரோதமான கட்சி. திமுக ஒழியாமல் பட்டியலின மக்களுக்கு எதிரான இழிவுகளை ஒழிக்க முடியாது. பட்டியலின மக்கள் அணி அணியாய் பிஜேபியில் சேர்கிறார்கள்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதுபோல்... 'நான் இல்லையென்றால் கூட அதிமுக நூறாண்டுகள் இருக்கும் அதைப் புரிந்து கொண்டு இன்றைக்கு எடப்பாடி ஒன்றரை கோடி தொண்டர்கள் எல்லோரும் சேர்ந்து வழிநடத்துகிறார்கள். அதிமுக தான் உண்மையான ஜனநாயக கட்சி, அதில் தொண்டன் தான் இன்று தலைவராக இருக்கிறார். திமுக அப்படி இல்லை எனக்கூறினார்.