ஆளுகட்சியான அதிமுக கொரோனா டெஸ்ட் எடுப்பதில் கூட கமிஷன் பார்க்கின்றனர். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மாஸ்க்குகளில் கமிஷன் அடிக்கின்றனர் என  திமுக மாவட்ட செயலாளர் சாத்துார் ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 23ம் தேதி தொடங்கி பல்வே ஊராட்சிகளில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடக்க தொடங்கின. 10 நாட்கள் தமிழகம் முழுவதும் 16,500 கிராம பஞ்சாயத்துகளில் மக்கள்  கிராம சபை கூட்டம் நடைபெறுகிற உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை, ஜவஹர் சங்க தெரு, காந்தி நகர் உட்பட பகுதிகளில் திமுக சார்பாக மக்கள்  கிராம சபை கூட்டத்தில் பேசிய சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது;- சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கும். ஸ்டாலின் தான் முதலமைச்சர். கடந்த முறை நீங்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த அதிமுக கட்சியின் அமைச்சர்கள் அளவே இல்லாமல் கொள்ளையடிக்கின்றனர். 

கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்ட கட்சியாக உள்ளது. கொரோனா டெஸ்ட் எடுப்பதில் கூட கமிஷன் பார்க்கின்றனர். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மாஸ்க்குகளில் கமிஷன். உங்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியில் கூட கமிஷன் பார்க்கின்றனர். நல்ல அரிசியை விற்று விடுகின்றனர். மோசமான அரிசியை பாலீஸ் செய்து வழங்குகின்றனர் திமுகவை வெற்றி பெற வையுங்கள். நல்லது நடக்கும் என தெரிவித்துள்ளார்.