தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளை வரை வாக்கு எண்ணிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தொடக்கம் முதலே  முதலே அதிமுகவும், திமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன.  இந்நிலையில், மாலை 7.30  மணி  நிலவரப்படி வெளியான முன்னிலை நிலவரம்  தெரியவந்துள்ளது.

மொத்தமுள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 150  இடங்களிலும், திமுக 150  இடங்களிலும்  வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில் அதிமுக 166 இடங்களிலும், திமுக 160 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இதேபோல், மொத்தமுள்ள 5067 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 788 இடங்களிலும், திமுக 843  இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 901 இடங்களிலும்,  திமுக 920 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. 

அமமுக 3 இடங்களில் மாவட்ட கவுன்சிலர் இடங்களையும், 39 ஒன்றிய கவுன்சிலர் இடங்களையும் பிடித்துள்ளன. மற்றவர்கள் 47 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளை வரை வாக்கு எண்ணிக்கை தொடரும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.