திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை, கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்களை வகுத்துவருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் அதற்கான காய்நகர்த்தல்களிலும், அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில் ஏற்பட்ட  பருவமழை, புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அதிமுக- திமுக உள்ளிட்ட இரு கட்சிகளும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிகளையும், நிவாரணங்களையும் வழங்கி  வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனாவையும் பொருட்படுத்தாமல் சென்னை முழுக்க மழை வெள்ளத்தின்போதும் நிவாரண பணியில் ஈடுபட்டார். 

இந்நிலையில் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல திட்டங்களை வழங்கினார். அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக உடனே அருகில் இருந்த தனியார் மருத்துமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திமுக தொண்டர்கள் மத்தியில் மிக்பெரிய அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினுக்கு என்ன ஆனது? உடலுக்கு என்ன பிரச்னை என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.