நடக்கவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரம் அரசியல் கட்சியினர் பரபரப்பாக தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். நாங்குநேரியை பொறுத்தவரை காங்கிரஸ் வேட்பாளர் என்பதால் திமுகவினருக்கு பெருசா ஆர்வம் இல்லை, ஆனால் விக்கிரவாண்டியை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது காரணம் பாமக ராமதாஸ், வன்னிய வாக்குவங்கிகளை பலமாக கொண்ட வடக்கு மாவட்டங்களில் விக்கிரவாண்டி தொகுதி முக்கியமானது. கடந்த தேர்தலில் சுமார் 40000 வாக்குகளை அள்ளிய பாமக இப்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறது. 

இதை மனதில் வைத்தே ஜெகத்ரட்சகன், ஏமார்க்கே பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுகவில் இருக்கும் வன்னிய தலைகளை திட்டை பிரசாரத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். வன்னிய சங்கங்களில்ன் முக்கிய புள்ளிகளை வீடு வீடாக சென்று அவர்களை சந்திக்க சொன்னது தான் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட். தொகுதியில் சுமார் ஒரு வாரமாக ரவுண்டடித்த ஜகாத்தும், எம்.ஆர்.கேவும் வன்னிய சமுதாய முக்கிய புள்ளிகள் கொடுத்த புகார் லிஸ்டை தளபதிக்கு அனுப்ப, அதை பார்த்த ஸ்டாலின் அடுத்தநாளே அசத்தலான ஒரு அறிக்கையை விட்டார் அதில், 

ஸ்டாலின் எம்பிசி கோட்டாவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு, ஏ கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் உள்ளிட்ட வன்னிய சமூக மக்கள் குஷியாகும் வகையில் அறிக்கை வெளியிட, கடுப்பான டாக்டர் ராமதாஸ், தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது 21 சொந்தங்களின் இன்னுயிரை தியாகம் செய்து பெற்றது தான் 20% இட ஒதுக்கீடு ஆகும்.

வன்னியர்களின் தொடர்சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு 25.11.1987 அன்று என்னையும், பிற சமுதாயத் தலைவர்களையும் அழைத்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார். ஆனால், அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக அவர் மறைந்து விட்ட நிலையில், அடுத்து வந்த ஆளுனர் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக 12.12.1988 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அடுத்த ஒரு மாதத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆளுனர் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் வன்னியர்களுக்கு மட்டும் 20%-க்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும்.

அவ்வாறு கூடுதல் இட ஒதுக்கீடு கிடைப்பதைத் தடுப்பதற்காகத் தான் 1989&ஆம் ஆண்டில் கலைஞர் அவசரம், அவசரமாக இடஒதுக்கீடு வழங்கினார். இதுதொடர்பாக என்னை அழைத்துப் பேசிய கலைஞரிடம் வன்னியர்களுக்கு 20% தனி ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதற்கு வாய்ப்பில்லை என்று கலைஞர் கூறிய போது, இட ஒதுக்கீட்டை 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கலாம் என்று வலியுறுத்தினேன். 

ஆனால், அதற்கும் ஒப்புக்கொள்ளாத கலைஞர், ‘‘இடஒதுக்கீட்டில் கூட உங்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்ள மறுக்கிறீர்களே? வெறும் 10,000 பேர் மட்டுமே உள்ள எங்களின் இசை வேளாளர் சமூகத்தையும் இந்தப் பிரிவில் சேர்த்துக் கொள்ளுங்களேன்’’ என்று கூறி வன்னியருக்கு மட்டும் கிடைக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை தமது இசைவேளாளர் சமுதாயம் உள்ளிட்ட 108 சமூகங்கள் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு வழங்கி துரோகம் இழைத்தவர் கலைஞர்.

ஸ்டாலினின் சமூகத்திற்கு தான் வன்னியர்களின் போராட்டத்தால் இட ஒதுக்கீடு கிடைத்ததே தவிர, வன்னியர்களுக்கு திமுக இட ஒதுக்கீடு பெற்றுத் தரவில்லை. இந்த சமூக நீதி வரலாறு எல்லாம் அப்போது வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த, அப்போதைய இளைஞரணித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என டாக்டரின் அறிக்கையை பார்த்த ஸ்டாலின், வழக்கம் போல கலைஞர் ஸ்டைலில் வன்னிய தலைவர்களை வைத்தே பதிலடி கொடுத்துள்ளார்.

அதுவும் ஒரே ஒரு அறிக்கையல்ல, ஒரு பக்கம் சம்மந்தி மகனான ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத், எம்.ஆர்கே பன்னீர்செல்வம் என ஒரு காட்டு காட்ட, தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார்  டிவிட்டரில் சென்று ராமதாஸை டேக் செய்து, பொய்., மீண்டும் பொய்., தோழர்களே டாக்டர் ராமதாஸ் இப்படி தான் மாவீரன் குரு குடும்பத்தை ஏமாற்றினார்.

இடஒதுக்கீட்டில் உயிர் நீத்த குடும்பங்களை ஏமாற்றினார்., வீரப்பன் குடும்பத்தை ஏமாற்றினார். இளைஞர்களே ஏமாறாதீர்கள். உங்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்., ஐயா ராமதாஸ், ஒரு சந்தேகம்,.சேலம் வேலூர் மயிலாடுதுறை அரக்கோணம் தர்மபுரி 25% /20seats நீங்கள் சொல்லும் சமுதாயம் திமுகவில் வென்றவர்கள் நீங்கள் போட்டியிட்டது 7, நீங்கள் வன்னியர்களுக்கு குடுத்த இடம் வெறும் 3/7, இப்போ சொல்லுங்க கறிவேப்பிலையா தூக்கி ஏறிந்தது யாரு. நீங்கள் தான்.

அடுத்து திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்;  “வன்னியர் சமுதாயத்தின் தன்னிகரில்லாத் தலைவர்கள் எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாருக்கு முழு உருவச் சிலை வைத்து, இப்போது ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவோம் என்று அறிவித்து, தான் மட்டுமே வன்னியர் சமுதாயத் தலைவர் என்று உருவாக்கிய தோற்றத்தை உடைத்து விட்டார்களே” என்ற கோபமா? “இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த வன்னிய சமுதாய இளைஞர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்ததில் கோபமா? என்று கேட்க விரும்புகிறேன்.

மருத்துவரய்யா கோபப்படும் அளவிற்கு எங்கள் கழகத் தலைவர் என்ன சொல்லிவிட்டார்? தி.மு.க. ஆட்சியில் வன்னியர் சமுதாய மக்களுக்கு செய்த சாதனைகளை விளக்கினார். போராட்டமே செய்யாமல் ஆலிவர் ரோட்டிற்கு டாக்டர் அய்யாவை அழைத்துப் பேசி இட ஒதுக்கீடு வழங்கியதைச் சொன்னார். உங்களையும், குருவையும் கொடுமைப்படுத்திய அ.தி.மு.கவுடன் வைத்துள்ள கூட்டணி பாசமும், தைலாபுர விருந்தின் “மகத்துவமும்தான்” இந்த கொந்தளிப்பிற்கு காரணம் என்றால் அதற்கு எங்கள் கழகத் தலைவர் பொறுப்பாக முடியாது''.

இதற்க்கு முன்பாக; . உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்ல தளபதி, காங்கிரஸ் கட்சி சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திமுக ஆட்சி தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் அமையப் போவது உறுதி. எனவே வன்னிய குல சத்திரிய மக்களின் கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது உறுதியாகி விட்டன என அன்புமணியின் மைத்துனர் அறிக்கையில் பாமகவை சூடாக்கியது.

வன்னிய மக்களுக்காக இப்படி ஒரு அறிக்கை விட்டால் ராமதாஸ் சூடாவார் எனத் தெரிந்தும், ராமதாஸ் வாயைத் திறந்தாலே திமுக வன்னிய தலைகளை வைத்து இமேஜை டேமேஜ் செய்ய பக்கா பிளான் என சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.