Asianet News TamilAsianet News Tamil

ஈழத்தை அழித்த இலங்கையில் பல ஆயிரங்கோடி இன்வெஸ்ட் செய்த தி.மு.க. வேட்பாளர்... வெடிக்கும் வீடியோ ஆதாரங்கள்... அதிர்ச்சியில் ஸ்டாலின்..!

தி.மு.க மற்றும் காங்கிரஸ் மீண்டும் கூட்டணி வைத்துள்ள நிலையில் ‘ஈழத்தை அழித்த பாவிகள்’ என்று எதிர்கட்சியினர் வைக்கும் விமர்சனத்துக்கு வலு சேர்ப்பது போல் ஜெகத்ரட்சகனின் பிஸ்னஸ் விபரங்கள் இருக்கின்றன.

DMK Jagathrakshakan Swamikannu travelled to Sri Lanka
Author
Tamil Nadu, First Published Mar 27, 2019, 4:50 PM IST

செகண்ட் கியரை போட்டு செம்ம ஸ்பீடாக போய்க் கொண்டிருக்கிறது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம். இதில் தனது கட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பதை விட, எதிர்கட்சி செய்த அட்டூழியங்களை திரைவிலக்கிக் காட்டி அசிங்கப்படுத்தி, அதில் ஆதாயம் தேட முயல்வதுதான் டிரெண்டாகிப் போயுள்ளது. 

அந்த வகையில் தி.மு.க.வின் காஸ்ட்லி வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு எதிராக ஒரு ரகசியத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு, அவரது வெற்றிக்கு உலை வைக்கும் வகையில் பிரசாரத்தை கொண்டு சென்று கொண்டுள்ளது அ.தி.மு.க. அது என்ன விவகாரம்?... என கேட்டபோது விளக்கிய அரசியல் பார்வையாளர்கள் “ஸ்ரீலங்காவின் ஹம்பந்தோட்டா ஹார்பருக்கு அருகே சுமார் இருபத்து ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுகிறதாம். இதில் கிட்டத்தட்ட பாதி பணத்தை, அதாவது பதிமூன்றாயிரம் கோடியை சில்வர் பார்க் இண்டர்நேஷனல் பி.லிட் எனும் நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறதாம். DMK Jagathrakshakan Swamikannu travelled to Sri Lanka

இந்த சர்வதேச நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பவர்கள் ஜெகத்தின் மனைவி அனுசுயா மற்றும் மகன் சந்தீப், மகள் ஸ்ரீநிஷா ஆகியோர். கடந்த 2017ல் துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் சில மாதங்கள் டைரக்டராக இருந்த ஜெகத், அதன் பின் அதிலிருந்து தான் விலகிவிட்டு, பொறுப்பை தன் குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளார் என கம்பெனியின் ஆவணங்கள் துல்லியமாக சொல்கின்றன. இலங்கையில் இந்த முதலீடு விஷயமாக அவர்கள் அங்கே பறந்து வந்ததையும் ஆவணமாக எடுத்துள்ளது ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஒரு ஸ்பை ஏஜென்ஸி. DMK Jagathrakshakan Swamikannu travelled to Sri Lanka

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, அபிடவிட்டில் தனது சொத்து மதிப்பாக சுமார் எழுபத்து எட்டு கோடி ரூபாய்க்குதான் காட்டியிருந்தாராம் ஜெகத். ஆனால் இப்போது இப்படியொரு மெகா பணம் எங்கிருந்து அவருக்கு வந்தது? என்று கேள்வி கிளப்பியிருக்கும் ஆளுங்கட்சி, மேற்படி சர்வதேச கம்பெனி ஜெகத் உடையதுதான் என்பதையும் ஆவணங்களுடன் நிரூபிக்கிறார்களாம். இலங்கையில் இறுதிப்போர் நடந்து லட்சக்கணக்கில்  தமிழர்கள் இறந்தபோது, ராஜபக்‌ஷே அரசுக்கு இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு ஆயுத உதவி செய்தது, அதை கூட்டணியில் இருந்தபடி மாநிலத்தை ஆண்ட தி.மு.க. தடுக்கவில்லை! என்ற விமர்சனம் இப்போதும் உள்ளது. DMK Jagathrakshakan Swamikannu travelled to Sri Lanka

இந்த தேர்தலில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் மீண்டும் கூட்டணி வைத்துள்ள நிலையில் ‘ஈழத்தை அழித்த பாவிகள்’ என்று எதிர்கட்சியினர் வைக்கும் விமர்சனத்துக்கு வலு சேர்ப்பது போல் ஜெகத்ரட்சகனின் பிஸ்னஸ் விபரங்கள் இருக்கின்றன!” என்று சொல்லும் அரசியல் பார்வையாளர்கள்...“தேர்தல் நேர்த்தில் இந்த விவகாரத்தை போட்டோ மற்றும் வீடியோ வடிவில் விளக்கி, தி.மு.க. கூட்டணிக்கு பெரும் நெருக்கடியை கொண்டு வரும் திட்டத்தில் உள்ளது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.” என்கிறார்கள். ஜெகத் இப்படி எக்கச்சக்கமாக சிக்கியிருப்பதோடு, அவரால் கட்சியின் வெற்றிக்கும் பிரச்னை உருவாகியுள்ளதாக நினைக்கும் ஸ்டாலின், ‘வேட்புமனு தாக்கல் வேறு முடிந்துவிட்டது. இனி என்ன செய்ய?’ என்று தலையிலடிக்கிறாராம். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!

Follow Us:
Download App:
  • android
  • ios