DMK IT Wing Sec PTR Palanivel Thiyagarajan Exclusive interview
சமூக வலைதளங்களில் திமுகவினர் அதிகளவில் பங்கெடுத்து வருகின்றனர். கட்சி மீதான விமர்சனம், ஆலோசனை என தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற ஒரு நிலை அதிமுகவில் கட்டுப்பாட்டோடு செயல்படும் நிலை உள்ளது.
ஆனால், திமுகவில் இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமா என்று பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம், கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திமுகவின் ஆதரவாளர்களாக மட்டும் செயல்படும் பொதுமக்களிடம் எந்தவித கட்டுப்பாடுகளையும் நம்மால் விதிக்க முடியாது என்று கூறினார்.
வார இதழ் ஒன்றுக்கு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்திருந்தார். அப்போது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
சமூக வலைத்தளங்களில், திமுக குறித்து தங்கள் கருத்துகளை பதிவிடுவது குறித்த கேள்வி ஒன்றுக்கும் அவர் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், திமுக என்பது அதிமுகவைவிட ஜனநாயகமும் இயக்க பற்றும் அதிமுள்ள கட்சி என்றார். கட்சி நிர்வாகிகளை அடிமையாக்கும் நடவடிக்கைகளில் எப்போதுமே திமுக ஈடுபட்டதில்லை என்றும் அவர் தெரவித்தார்.
அதேசமயம், சரியான கருத்துக்களை மக்கள் மன்றத்தில் பதிவு செய்வது மட்டுமே நம் கடமை. கட்சி நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் கட்டுப்பாட்டோடு செயல்பட வேண்டும்.
ஆனால் திமுகவின் ஆதரவாளர்களாக மட்டும் செயல்படும் பொதுமக்களிடம் எந்தவித கட்டுப்பாடுகளையும் நம்மால் விதிக்க முடியாது என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். ஆனால், அவர்களிடம் இயக்கத்தின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் கொண்டு சேர்க்கும் பணி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
கட்சியின் கொள்கைகளை மக்களிடம் சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம் என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
