திருச்சி முக்கொம்புவில்,கடந்த சனிக்கிழமை அன்று காவிரி உரிமை மீட்பு பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு, விவசாயிகள், பொதுமக்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

தொடர்ந்து 6 நாட்கள் நடைப்பெற்ற இந்த பயணத்தின் போது, மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின்.

குறிப்பாக விவசாய பெருருமக்களை சந்தித்து பிரச்சனைகள் அனைத்தும் கேட்டறிந்து, ஒரு மனுவாக இன்று மதியம் ஆளுநரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளார் ஸ்டாலின்.

இதற்கு முன்னதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,அவர் மேற்கொண்ட பயணத்தின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது அவருடனே சென்ற திமுக ஐடி விங்.

திமுக ஐடி விங்

திமுக செயல் தலைவரின் பயண நேரங்கள் முதல்,எந்த பகுதி மக்களை சந்திக்கிறார் மக்களின் பிரச்சனைகளை கேட்டறிதல்,எந்த நேரத்தில் புறப்பாடு,இது போன்ற அனைத்து விவரமும் நொடிக்கு  நொடி தொண்டர்களிடையே எடுத்து சென்றது திமுக ஐடி விங்.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள்,செயல் தலைவர் ஸ்டாலினின்  ஒவ்வொரு திட்டத்தையும் எளிதில் அறிந்துகொள்ள முடிந்தது.

இதற்காக ஒரு இணையதளம் தொடங்கி,அதற்காக ஒரு தனி குழு அமைக்கப்பட்டு,சென்னையில்  செயல்பட்டு வருகிறது  

குறிப்பாக தற்போது,

காவிரி உரிமை மீட்பு பயணத்தில் தளபதி எங்கிருந்தார்..?

எத்தனை தூரம் பயணித்திருக்கிறார்?

எத்தனை மக்களை சந்தித்திருக்கிறார்?

எந்த வழித்தடத்தில் பயணிக்கிறார்?

உள்ளிட்ட மேலும் பல தகவல்களை அறிய :

http://cauverymeetpupayanam.com என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்றாலே எளிதில் தொண்டர்கள் புரிந்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில்,திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ராஜ் பவனில்  ஆளுனரை சந்தித்து மக்கள் பிரச்சனை குறித்து பேசி அறிக்கையாக சமர்பிக்க உள்ளார்.

இது குறித்து தற்போது தோழமை கட்சிகளுடன் ஆலோனை செய்து வருகிறார் ஸ்டாலின்.