Asianet News TamilAsianet News Tamil

திமுக நம்மை இவ்வளவு கேவலமாக நடத்துகிறதே... கண்ணீர் விட்டு கதறும் காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி..!

காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இன்னும் தொகுதிப்பங்கீடு முடியவில்லை. காங்கிரஸ் 41 சீட்டுகள் கேட்டு வந்தது. ஆனால் திமுகவோ 18 தொகுதிகள் மட்டும் தான் ஒதுக்க முடியும் என தெரிவித்து விட்டது. 

DMK is treating us so disgustingly ... Congressman KS Alagiri sheds tears
Author
Tamil Nadu, First Published Mar 5, 2021, 4:03 PM IST

காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இன்னும் தொகுதிப்பங்கீடு முடியவில்லை. காங்கிரஸ் 41 சீட்டுகள் கேட்டு வந்தது. ஆனால் திமுகவோ 18 தொகுதிகள் மட்டும் தான் ஒதுக்க முடியும் என தெரிவித்து விட்டது. இந்நிலையில் தொகுதிப்பங்கீட்டில் வித்தியாசம் அதிகமாக இருப்பதால் இந்த கூட்டணி உடையுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.DMK is treating us so disgustingly ... Congressman KS Alagiri sheds tears

இதுகுறித்து, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தங்களுக்கு அளிக்கப்படும் தொகுதிகள் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசமாக இருக்கிறது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக, திமுக தங்களது கூட்டணியை உறுதிப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் திமுக தனது கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ்-திமுக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் ததும்ப கே.எஸ்.அழகிரி பேசியுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “110 தொகுதிகளிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை பெற்று வருகிறோம், இந்த முறை குறைந்த இடம் பெற்றால் அடுத்த முறை பேசுவதற்கு கூட இடம் இருக்காது. திமுக அளிக்கும் தொகுதிகள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது.” என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.DMK is treating us so disgustingly ... Congressman KS Alagiri sheds tears

“இந்த முறை விட்டுக்கொடுக்கலாம். ஆனால், கட்சி இல்லாமல் போய்விடும். தன்மானம் சுய கெளரவம்தான் முக்கியம். இதன் கூட்டணி உடைந்துவிட்டது என்பதில்லை. திமுகவும் நன்றாக இருக்க வேண்டும், நாமும் நன்றாக இருக்க வேண்டும். அதிக தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. திமுக காராறாக இருக்கிறார்கள். இந்த தொகுதி பங்கீட்டின் மூலம் கூட்டணி உடையாது.” என செயற்குழுவில் கண்ணீர் மல்க பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios