தமிழகத்தில் சுமார் 10000 மேல் சச்சுகள் வருவதற்கு பக்காவாக வேலை செய்த திமுக தான் காரணம் என மாரிதாஸ் திடுக் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற சென்னைக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வருவதாக நேற்று பகீர் குற்றச்சாட்டை கிளப்பி இருந்தார். இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ''சென்னைக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் 1000 கோடிக்கும் மேல் வெளி நாடுகளிலிருந்து கிறிஸ்தவ மதம் மாற்றி இயக்கங்களுக்கு வருகிறது. அதுவும் பக்கா திட்டமிடலுடன் தெளிவாக வழிமுறைகள் செய்யப்பட்டு வருகிறது என்று நான் சொன்னது பொய் என்று திமுக திக பரப்பினர் அதற்கான ஆதாரம் FRCA தகவல்கள் இதோ

மீண்டும் சொல்வேன் மாநிலம் முழுவதும் சுமார் 10,000 மேல் சர்ச்சுகள் வருவதற்கு பக்காவாக வேலை செய்த இயக்கம் திமுக அதன் அடிவருடிகளான கிறிஸ்தவ மதம் மாற்றும் நிறுவனங்கள்.

இதைச் சொன்னதற்கு நான் கிறிஸ்தவர்களுக்கு எதிரானவன் என்றால் என்ன அர்த்தம்? நான் கிருஸ்துவை வைத்து பிசினஸ் செய்யும் வெளி நாடுகளிலிருந்து வரும் பணத்திற்காக இங்கே இருந்த ஆன்மீக நம்பிக்கைகளை அழிக்கும் கீழ்த்தரமான கும்பலை எதிர்த்தேன். இங்கே மட்டும் அல்ல. ஆப்ரிக்கா முழுவதும் வருமையைப் பயன்படுத்தி மதம் மாற்றுவதையும் எதிர்த்தேன்.

இது மத துவேசமா? இதற்குத் தான் திமுக -திக இப்போது நான் மதத்திற்காகப் பேசியது போல் எதிர்ப்பை பரப்பிவிடுகிறார்கள்? மனசாட்சி உள்ள ஒவ்வொரு நபரையும் கேட்கிறேன். ஆதாரம் தருகிறேன். தவறு என்று நிரூபித்து காட்டுங்கள் திமுக- திக கூட்டத்தினர்.

(வெளி நாடுகளில் இருந்து மட்டும், அதுவும் ஒரு நகரத்திற்கு மட்டும் வரும் நிதி. அப்படி என்றால் இந்தியா, தமிழ்நாடு? இதற்கு பேர் என்னவிதமான மதசார்பின்மை?’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.