திமுகவினர் வடநாட்டுக்காரனை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களா வந்து ஓட்டு போடுவார்கள் என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர் என்று ஒரே நாளில் ஏழு தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.
Add Asianetnews Tamil as a Preferred Source


அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி... "அதிமுக கட்சி மாவட்டத்துல எங்க ஆலோசனை நடத்தினாலும் கிடா வெட்டி, கறி விருந்துடன் அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு அரசியல் பண்ணக்கூடிய இயக்கமாக இருக்கிறது.ஏழு தொகுதிகளிலும், ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய பகுதிகளில் சாப்பாடுக்கு ஏற்பாடு பண்ணிட்டோம். என்றவர்.. ‘’திமுகவினர் வடநாட்டுக்காரனை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களா வந்து ஓட்டு போடுவார்கள் என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
