திமுக மதங்களுக்கு எதிரான கட்சி இல்லை என்றும் மதவெறிக்கு எதிராக கட்சி என்றும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக முரசொலியில்சிலந்தி என்ற பெயரில் வெளியிட்டுள்ள கட்டுரையில்;- இந்து விரோதிகள் என கூறி திமுகவின் வளர்ச்சியைத் தடுத்து விடலாம் என்பது அரதப் பழசான சிந்தனை என்று தலைவர் தளபதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து எத்தனை உண்மையானது என்பதற்கு பல ஆதாரங்களை எடுத்துக்காட்டிட முடியும். அரதப்பழசு என்பதை விட இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட போதெல்லாம் அதனைக் கிழித்து  நார்நாராகத் தொடங்கவிட்டுள்ளது திமுக. நைந்து கிழிந்து தொங்கும் ஆடையை தங்கள் மேல் உடுத்திக் கொண்டு தாங்கள் எத்தகைய பைத்திக்காரர்கள் என்பதை நாட்டுக்கு அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். 

ஒவ்வொரு தேர்தலிலும் திமுக வீழ்த்த காரணம் எதுவும் கிடைக்காமல் எடுக்கும் ஆயுதம் தான்  இந்து விரோதி என்ற குற்றச்சாட்டு என்றும், 1971ம் ஆண்டு தேர்தலில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தை மீறி  திமுக வெற்றி பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், கருணாநிதி முதல்வராக இருந்த போது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தை தூர்வாரி புகைப்படத்தை முரசொலி வெளியிட்டுள்ளது. திமுக ஆதரவு நிலை எடுப்பவர்கள் பலர் சில கொள்ளைகளில் தங்களுக்கென தனி கருத்தை கொண்டிருப்பார்கள் என்றும்,  அவர்கள் கூறும் எல்லாவற்றிற்கும் திமுகவால் பொறுப்பேற்க முடியாது என அதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.