அரசு சுவரில் விளம்பரம் செய்திருப்பதாக அதிமுகவின் விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவினரின் விளம்பரத்தை அழிக்க முயன்ற வட்டார வளர்ச்சி அலுவலரை திமுகவினர் மிரட்டுகின்றனர்.

திமுக புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதிமுக நிர்வாகிகளை திமுகவில் சேரும்படி கூறி மிரட்டுவதாக கரூர் எஸ்பி ப.சுந்தரவேலுவிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் அளித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அதிமுக நிர்வாகிகளை திமுகவில் சேரும்படியும், இல்லாவிட்டால் தேர்தல் பணியாற்றக் கூடாது என்றும் கூறி மிரட்டி வருகின்றனர். தோல்வி பயம் காரணமாக அராஜகம் செய்து தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர்.

கரூரில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நான் முகக்கவசம் அணிந்து மரக்கன்றுகள் வழங்கியும், என் மீது போலீசார் தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேநேரம், வெள்ளியணையில் திமுக நடத்திய விழாவில் கூட்டம் கூடியதற்கு வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

அரசு சுவரில் விளம்பரம் செய்திருப்பதாக அதிமுகவின் விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவினரின் விளம்பரத்தை அழிக்க முயன்ற வட்டார வளர்ச்சி அலுவலரை திமுகவினர் மிரட்டுகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுகவிற்கு எதிராக கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரி்க்கை விடுத்துள்ளார்.