”பி.ஜே.பி.யின் 'B டீம்' தான் கமல்ஹாசன். அவர் சமீபத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் கோட்சே’ என்று சொன்னதெல்லாம் பி.ஜே.பி. கொடுத்த அஸைன்மெண்டின் படி அவர் பேசிய பேச்சுக்கள்.” என்று விமர்சகர்கள் வேறு ரூட்டில் கமல்ஹாசனை வறுத்தெடுத்து வருகிறார்கள். இதை நமது ஏஸியாநெட் தமிழ் இணைய தளத்தில் விரிவாக எழுதியிருந்தோம். 

இந்நிலையில், கமல் பற்ற வைத்த பட்டாசு பக்காவாக வெடித்து வேலை செய்து, நான்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு சாதகமான சூழலை உருவாக்கிவிட்டது, இதனால் கமல் மீது செம்ம ஹேப்பியில் இருக்கிறது பி.ஜே.பி! என்கிறார்கள். 

அவர்களிடம் விரிவாக கேட்டபோது....”நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்க போகுது, இதை வெச்சு ஆட்சியை தக்க வைக்க முடியுமான்னு தெரியலை. இதனால் நாளைக்கு நடக்க இருக்கும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் நூறு சதவீதம் வெற்றியடைந்தே தீர வேண்டும் என்பதில் ரொம்ப துல்லியமா இருக்குது அ.தி.மு.க. 

இதற்கு தோள் கொடுக்க வந்த பி.ஜே.பி.யின் அஸைன்மெண்டின் படிதான் கமல் அப்படி கோட்ஸைவை பற்றிப் பேசி, இந்துக்களை வம்புக்கிழுத்தார். இப்படி பேசினால் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் ’பகுத்தறிவு, திராவிடம், இந்துத்வ எதிர்ப்பு’ எனும் நிலைப்பாட்டின் படி கமலுக்கு ஆதரவாக பேசுவார்கள். இதனால் நான்கு தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க.வின் மேல் இந்துக்களுக்கு வெறுப்பு உருவாகும், இதன் மூலம் அவர்களின் வாக்கு வங்கியானது அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மையாக சாயும்! என்பது அவர்கள் போட்ட கணக்கு. 

இது அப்படியே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. தி.மு.க.வின் கூட்டணியிலிருக்கும் காங்கிரஸின் தமிழக தலைவரான கே.எஸ்.அழகிரி ‘கமலின் விமர்சனம் ஆயிரம் மடங்கு உண்மை.’ என்று கூறி பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணியை குஷியாக்கினார். இதனால் இந்துக்களின் வாக்கு வங்கி தி.மு.க.வுக்கு எதிராக திரும்புவதை உணர்ந்து ஸ்டாலின் டென்ஷனாகியிருக்கும் வேளையில், அவரது கூட்டணியிலிருக்கும் வைகோவும் ‘கமலின் கருத்தில் எந்த தவறுமில்லை. அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் மீது முட்டை வீசி தாகுதல் நடத்தியது  நியாயமற்றது. இதை வன்மையாக கண்டிக்கிறேம்.’ என்று பாய்ந்துள்ளார். இதும் ஸ்டாலினை அப்செட் ஆக்கியுள்ளது. 

ஆனால், தாங்கள்  காய் நகர்த்தியது போலவே  தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் கமலுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுப்பதால், இந்துக்கள் தி.மு.க.வுக்கு எதிராக திரும்புவது உறுதியாகியுள்ளதால் பி.ஜே.பி. ஏக சந்தோஷத்தில் இருக்கிறது. தனக்கான பணியை சரிவர செய்ததால் கமலும் கூலாக இருக்கிறார். இது எல்லாமே பக்கா நாடகம்.” என்று முடிக்கிறார்கள். 
ம்ம்முடியல!