வாரிசு அரசியலைத் தாண்டி குடும்ப அரசியலாக மாறிவிட்டது DMK.. ஒரே அடியில் ஸ்டாலினை கிளீன் போல்ட்டாக்கிய செல்வம்.!
திமுகவில் வாரிசு அரசியலைத் தாண்டி குடும்ப அரசியல் வந்துவிட்டதாக அக்கட்சியின் எம்எல்ஏ கு.க.செல்வம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவில் வாரிசு அரசியலைத் தாண்டி குடும்ப அரசியல் வந்துவிட்டதாக அக்கட்சியின் எம்எல்ஏ கு.க.செல்வம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை, டெல்லியில் நேற்று சந்தித்த கு.க. செல்வம், இன்று தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு காவி துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள ராமரின் படத்திற்கு கு.க. செல்வம் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கு.க.செல்வம்;- பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் முருகன் ஆகியோருக்கு நன்றி. நான் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர்களிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு மின் தூக்கி கேட்டேன். தமிழகத்தில் வாரிசு அரசியல் நடக்கிறது. திமுக உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். முருகனை பற்றி தவறாக பேசியவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். கட்சியை விட்டு நீக்கினாலும் எனக்கு கவலை இல்லை.
மு.க.ஸ்டாலினின் தலைமையைத் தாண்டி தற்போது அவரது மகன் உதயநிதியின் தலையீடு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வாரிசு அரசியல் மாறி திமுகவில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.