தமிழக அரசின் பட்ஜெட் அல்வா கொடுக்கும் பட்ஜெட் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். 

தமிழக அரசின் பட்ஜெட் அல்வா கொடுக்கும் பட்ஜெட் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாண்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இந்த நிலையில் தேர்தலின் போது சென்னை மாநகராட்சி 49 ஆவது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக கூறி திமுக பிரமுகரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து திமுக பிரமுகரை தாக்கியாக பதிவான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. நிபந்தனை ஜாமீன்படி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திருச்சியில் 2 வாரங்கள் தங்கி இருக்க வேண்டும். மேலும் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்தில் திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் 3 நாட்கள் வீதம் 2 வாரங்களுக்கு நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி இந்த வாரம் திங்கள் கிழமை அதிகாலை திருச்சி வந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார். இதனை தொடர்ந்து திங்கள், புதன் கிழமை காலை 10.30 மணி அளவில் திருச்சி சட்ட ஒழுங்கு காவல் நிலையத்தில் இரண்டு முறை கையெழுத்திட்டர்.

இந்த வாரத்தின் மூன்றாவது நாளாக இன்று காலை 10.40 மணி அளவில் முன்னால் அமைச்சர் ஜெயகுமார் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்ட வழக்கு தலைமை கழக நிர்வாகிகள், முக்கியமானவர்கள், வரும் பொழுது தொண்டர்கள் எழுச்சியுடன் வரவேற்பது வழக்கம் தான். நாங்கள் கட்டுப்பாடுகளோடு தான் நடந்து கொண்டோம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி 10,000 பேரை கூடியபோது கொரோனா ஏற்படவில்லையா?. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற போவதில்லை, அதுபோல் தான் தமிழக அரசின் பட்ஜெட் அல்வா கொடுக்கும் பட்ஜெட் அதுவும் திருநெல்வேலி அல்வா ஆகும். திமுக அரசு, அதிமுக அரசின் திட்டங்கள் மீது லேபிள் ஒட்டும் அரசாக உள்ளது என்றார்.