Asianet News TamilAsianet News Tamil

பல வருஷ சம்பவத்தை நோண்டி எடுத்து தெளிய தெளிய வெச்சு சம்பவம் பண்ணும் உ.பிக்கள்!! பதிலில்லாமல் பதுங்கும் பாமக

'மருத்துவர் ராமதாஸ் அறிக்கையும்- ஒரு இட ஒதுக்கீட்டுப் போராளியின் குரலும்...'' என்ற தலைப்பில் பல வருஷ சம்பவத்தை நோண்டி எடுத்து தெளிய தெளிய வெச்சு பதிலளித்துள்ளார்.

DMK Gnanamurthy statements against PMK Ramadoss
Author
Chennai, First Published Oct 9, 2019, 5:02 PM IST

திமுக ஆட்சி அமைந்தவுடன் வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்டபமும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராகவும், "ஏஜி"என அண்ணாவால் அன்புடன் அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபம்  இட ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களை குறிப்பிட்டு ஸ்டாலின் அறிக்கை விட  இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு செய்து தருவதாக ஸ்டாலின் கூறியிருப்பது வெற்று வாக்குறுதிகள் யாரும் நம்பாதீங்க என கூறியிருந்தார்.

பொதுவாக ஒருவரின் அறிக்கைக்கு, சம்பந்தப்பட்டவர் பதில் சொல்வதுதான் வழக்கம். ஆனால், வன்னியர் பிரச்சினைகளில் மட்டும், திமுகவில் உள்ள வன்னிய தலைவர்களை வைத்தே பதில் சொல்ல வைப்பதை கருணாநிதியும், ஸ்டாலினும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். தற்போது வெளியான ராமதாஸின் அறிக்கைக்கு அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தருமபுரி டாக்டர் செந்தில், தற்போது செந்துறை திமுக ஒன்றியச் செயலாளர் மு. ஞானமூர்த்தி திணற திணற கேள்வியால் சிதற விட்டுள்ளார்.

DMK Gnanamurthy statements against PMK Ramadoss

'மருத்துவர் ராமதாஸ் அறிக்கையும்- ஒரு இட ஒதுக்கீட்டுப் போராளியின் குரலும்...'' என்ற தலைப்பில் பதிலளித்துள்ளார்.

ராமதாஸ் : திமுகவின் தளகர்த்தர்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், மதுராந்தகம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் அவர்களின் கடைசி காலத்தில் திமுக தலைமையால் எப்படியெல்லாம் உதாசீனப் படுத்தப்பட்டார்கள்; எப்படியெல்லாம் அவமானப் படுத்தப்பட்டார்கள்; அதனால் அவர்கள் எந்த அளவுக்கு மனம் நொந்து மறைந்தார்கள் என்பதை வன்னியர்கள் நன்கு அறிவர். அவற்றை எல்லாம் மறைத்து விட்டு வன்னியர் நண்பர் வேஷம் போட மு.க. ஸ்டாலின் முயன்றால் அது எடுபடாது. 

போராளி : பாமகவில் இணைந்த 1991முதல் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டியரையும், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி அவர்களையும், வன்னியர் சங்கத்தலைவர் ச. சுப்பிரமணியம் ஐஏஎஸ் அவர்களையும் , பேராசிரியர் தீரனையும், வேல்முருகனையும், செந்துறை ஞானமூர்த்தியையும், புதா. இளங்கோவனையும், ஓமலூர் தமிழரசுவையும், மேல்மலையனூர் தமிழ்ச்செல்வனையும்,இப்படி ஆரம்ப காலத்தில் சங்கத்தை கட்டமைத்து உங்களுக்கு துணையாக இருந்த போராளிகளை கேவலப்படுத்தி வெளியேற்றியது யாருக்கும் தெரியாதா?. 

ராமதாஸ் : ஒரு கட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில் திமுகவை வழிநடத்தும் பொறுப்பை வன்னியரான ‘ஏ.ஜி’ அவர்களிடம் அண்ணா ஒப்படைத்தார். ஆனால்,  1969-ஆம் ஆண்டில் திமுக தலைவராக கலைஞர் பொறுப்பேற்ற பிறகு இன்று வரையிலான 50 ஆண்டுகளில் திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் எத்தனை வன்னியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது தான் வேறு வழியின்றி திமுகவின் பொருளாளராக  துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. பெயரளவில் மட்டும் அவர் பொருளாளராக பதவி வகிக்க, அந்த பதவிக்கு உரிய அதிகாரங்கள் அனைத்தையும் ஸ்டாலினை சுற்றியுள்ள அவரது துதிபாடிகள் தான் அனுபவிக்கின்றனர் என்பதை மறுக்க முடியுமா?.

போராளி : பாமகவில் என்ன வாழ்கிறது. ஜிகே மணி, முயலுக்கு 3 கால் என்றால் ஆமாங்கையா 3 கால்தான் என்பவரைத்தானே தலைவராக போட்டிருக்கிரீர்கள். தத்துவார்த்த ரீதியாக உண்மைப் போராளிகள் யாரையாவது தலைவராக்கியதுண்டா?

ராமதாஸ் : வன்னியர்கள் மீது பாசம் வைத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் ஸ்டாலின் கட்சியின் தலைமை தான் தருமபுரி நிகழ்வின்போது வன்னியர்களை ஆதிக்க சாதி என்று விமர்சித்தது. தருமபுரிக்கு உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி வைத்து வன்னியர்கள் மீது அபாண்டமான பழிகளை சுமத்தியது. தருமபுரிக்கு உண்மை கண்டறியும் குழுமை அனுப்பிய திமுக, மரக்காணம் கலவரத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் இரு வன்னியர்கள் கொடூரமான வெட்டிக் கொல்லப்பட்ட போதும், கடலூர் மாவட்டம் குச்சிப்பாளையம் கிராமத்தின் வன்னியர்கள் தாக்கப்பட்ட போதும் உண்மை கண்டறியும் குழுக்களை திமுக தலைமை அனுப்பாதது ஏன்? வன்னியர்கள் மீதான ஸ்டாலினின் வெறுப்பு தானே?.

போராளி : அது ஸ்டாலினுக்கு வன்னியர் மீதான வெறுப்பு என்று கட்டுக்கதை கட்டவேண்டாம். பாமக என்ற பெயரில் பாண்டிச்சேரியில் குடித்துவிட்டு மாமல்லபுரம் மாநாட்டுக்கு செல்லும் வழியில் உங்கள் தொண்டர்கள் ஏற்படுத்திய கலவரம் என்று உயர்நீதி மன்றமே உங்களை கண்டித்ததே நினைவில்லையா. உங்கள் கூட்டணி தலைவி ஜெயலலிதாவே உங்களை சட்டமன்றத்தில் கேவலமாக பேசி சிறையில் தள்ளினாரே ஞாபகம் இல்லையா. சிறையில் அடைத்ததோடு 150 ம் மேற்பட்ட வன்னியர்களை ஒரே நேரத்தில் குண்டர் சட்டத்தில் போட்டாரே மறந்துவிட்டதா?.

ராமதாஸ் : பொன்பரப்பி வன்முறையைத் தொடர்ந்து தம்மை கிழட்டு சிறுத்தை என்று அழைத்துக் கொண்ட போலி மதபோதகர் எஸ்ரா சற்குணம் வன்னியர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று விமர்சித்த போதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வன்னியர்களை மரம் வெட்டிகள் என்று கொச்சைப் படுத்திய போதும், வன்னியர்கள் மீது பாசம் கொண்டவரான திமுக தலைவர் ஸ்டாலின் சீறி எழாதது ஏன்? அவ்வாறு பொங்கி எழாமல் அவரைக் கட்டுப்படுத்தியது யார்? முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஸ்டாலின் அவர்கள், இப்போது திடீரென தம்மை வன்னியர்களின் தோழன் என்று கூறிக் கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல. தேர்தலின் போது கொண்டாடவும், தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிவதற்கு வன்னியர்கள் கறிவேப்பிலையும் அல்ல என்பதை காலமும், மக்கள் தீர்ப்பும் ஸ்டாலின் அவர்களுக்கு உணர்த்தும்.


போராளி : வன்னியர்களை வைத்து ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் நடத்திய வியாபாரத்தை நன்றாக புறிந்து கொண்டுதான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பட்டை நாமம் போட்டார்கள். உங்கள் வன்னியர் காப்பாளர் நாடகம் இனி எடுபடாது மருத்துவரே! எடுபடாது!

ராமதாஸ் : தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தச் செய்வதன் மூலம் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை 2021 தேர்தலுக்கு முன்பாகவே வென்றெடுக்கும் சக்தி பா.ம.க.வுக்கு உண்டு. மற்றபடி, 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருந்தால் அவருக்கு நான் கூற விரும்புவது, அவருக்கு மிகவும் பிடித்த, அவரால் பலமுறை கூறப்பட்ட ‘‘சீனி சக்கரை சித்தப்பா... சீட்டில் எழுதி நக்கப்பா’’ என்ற பழமொழியைத் தான்.
 
போராளி : உங்களை சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே வன்னியர்கள் நன்றாக புறிந்துகொண்டு புறந்தள்ளி விட்டார்கள். தர்மபுரியில் தலை தப்பினால் போதும் என்று ஓட்டம் பிடித்து தந்தையும், மகனும் ஓடிவந்தீர்களே போதாதா? இன்னும் துரத்த வேண்டுமா? இந்த உங்கள் அறிக்கைக்கு எடப்பாடி நல்ல கூலி கொடுப்பார் சென்று வாங்கிக்கொள்ளுங்கள்.

ராமதாஸ் : வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு இப்போது வன்னியர்கள் வெல்லக்கட்டியாக இனிக்கிறார்கள் போலிருக்கிறது.

போராளி : வன்னியர்கள் மட்டுமல்ல. அவர் எந்த சாதியையும் இழிவுபடுத்தியவர் இல்லை.

ராமதாஸ் : வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20% இட ஒதுக்கீட்டை திமுக தான் வழங்கியதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப் போவதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். 1989-ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கு திமுக அரசு இடஒதுக்கீட்டை எளிதாக தூக்கிக் கொடுத்துவிடவில்லை. 

போராளி : எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு உங்களை உதாசீனப்படுத்திய பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தானே உங்களை அழைத்துப் பேசி 20 % இடஒதுக்கீடு வழங்கினார்.  

ராமதாஸ் : தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னியர்களுக்கு 17% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 13.11.1969 அன்று அமைக்கப்பட்ட சட்டநாதன் குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த பரிந்துரையை செயல்படுத்தாமல், மொத்த இடஒதுக்கீட்டின் அளவை 41 விழுக்காட்டிலிருந்து 49% ஆக உயர்த்தியதுடன் நிறுத்திக் கொண்டு வன்னியர்களுக்கு துரோகம் செய்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு.

போராளி : சட்டநாதன் கமிஷனை அமைத்ததே கலைஞர்தானே. அன்றைக்கு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று நீங்கள் கேட்டதுண்டா? அதன் பிறகு கலைஞரோடு பல ஆண்டுகாலம் நட்புறவோடு இருந்து பல சலுகைகளை அனுபவித்து வந்தீரே அப்போது ஏன் தனி இட ஒதுக்கீடு கேட்கவில்லை?
 
ராமதாஸ் : அதன்பின் 1980-ஆம் ஆண்டில் வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி, தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது 21 சொந்தங்களின் இன்னுயிரை தியாகம் செய்து பெற்றது தான் 20% இட ஒதுக்கீடு ஆகும்.

போராளி : சாலை மறியலில் உயிரிழந்த 21 போராளிகளின் குடும்பங்களுக்கு இதுவரை நீங்கள் செய்த உதவிகள் என்ன? அந்த குடும்பம் எந்த நிலையில் இருக்கிறது என்றாவது உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் தெரியுமா?.

ராமதாஸ் : அப்போதும் அந்த இட ஒதுக்கீட்டை கலைஞர் மனமுவந்து தரவில்லை. வன்னியர்களுக்கு இன்னும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைத்து விடக்கூடாது என்ற கெட்ட நோக்கத்திலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கட்டாயத்தின் பேரிலும் தான் இடஒதுக்கீட்டை கலைஞர் வழங்கினார்.

போராளி : கலைஞர் கெட்ட நோக்கத்தில்தான் தந்தார் என்றால் உங்கள் மகன் அன்புமணி திருமணத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களே வருக! வருக! என்று வருந்தி அழைத்தீர்களே அவரிடம் கேட்டு பெற்றிருக்கலாமே ஏன் முயலவில்லை.


DMK Gnanamurthy statements against PMK Ramadoss

ராமதாஸ் : வன்னியர்களின் தொடர்சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு 25.11.1987 அன்று என்னையும், பிற சமுதாயத் தலைவர்களையும் அழைத்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார். 

போராளி : இது ஒரு அப்பட்டமான பொய். எம்ஜிஆர் உங்களை மட்டும் அழைக்கவில்லை, 94 சாதி சங்கங்களை அழைத்தார். கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அனைவரையும் அனுப்பிவிட்டார். எந்த முடிவையும் அவர் எடுக்கவும் இல்லை. அறிவிக்கவும் இல்லை.

ராமதாஸ் : ஆனால், அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக அவர் மறைந்து விட்ட நிலையில், அடுத்து வந்த ஆளுனர் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக 12.12.1988 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. 

போராளி : அப்போது ஆளுனராக இருந்த அலெஸாண்டர் அவர்கள் மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என அதற்கான ஃபைலை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார். மத்திய அரசும் இட ஒதுக்கீடு மாநில அரசு சம்மந்தப்பட்டது எனக்கூறி கிடப்பில் போட்டது என்பதை மறைக்கலாமா மருத்துவரே?

ராமதாஸ் : அடுத்த ஒரு மாதத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆளுனர் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் வன்னியர்களுக்கு மட்டும் 20%-க்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அவ்வாறு கூடுதல் இட ஒதுக்கீடு கிடைப்பதைத் தடுப்பதற்காகத் தான் 1989&ஆம் ஆண்டில் கலைஞர் அவசரம், அவசரமாக இடஒதுக்கீடு வழங்கினார். இதுதொடர்பாக என்னை அழைத்துப் பேசிய கலைஞரிடம் வன்னியர்களுக்கு  20% தனி ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதற்கு வாய்ப்பில்லை என்று கலைஞர்  கூறிய போது, இட ஒதுக்கீட்டை 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கலாம் என்று வலியுறுத்தினேன். 

DMK Gnanamurthy statements against PMK Ramadoss
போராளி : சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் வேலை. பாமக 10 ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்றத்தில் இருந்தீர்களே என்றைக்காவது சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பேசியதுண்டா? 

ராமதாஸ் : ஆனால், அதற்கும் ஒப்புக்கொள்ளாத கலைஞர், வன்னியருக்கு மட்டும் கிடைக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை 108 சமூகங்கள் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு வழங்கி துரோகம் இழைத்தவர் கலைஞர்.

போராளி : கலைஞர் துரோகம் செய்தார் என்கிறீர்களே விழுப்புரத்தில் மாநாடு நடத்தி கலைஞருக்கு மஞ்சள் சால்வை அணிவித்து நீங்கள் பேசியதை மறந்துவிட்டீரா? திண்டிவனத்திற்கு அருகில் உங்கள் மனைவி பெயரில் கல்லூரி கட்டி கலைஞரை அழைத்து திறக்க வைத்து அதில் பேசியதையும் மறந்துவிட்டீரா மருத்துவரே?
 
ராமதாஸ் : ஸ்டாலினின் சமூகத்திற்கு தான் வன்னியர்களின் போராட்டத்தால் இட ஒதுக்கீடு கிடைத்ததே தவிர, வன்னியர்களுக்கு திமுக  இட ஒதுக்கீடு பெற்றுத் தரவில்லை. இந்த சமூக நீதி வரலாறு எல்லாம் அப்போது வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த, அப்போதைய இளைஞரணித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

போராளி : ஸ்டாலின் இளைஞரணித் தலைவராக இருந்தார். நெருக்கடி நிலை வந்தபோது ஒரு ஆண்டுகாலம் சிறைக்கொட்டடியில் சித்ரவதைப்பட்டார். கழகத்தில் பல தளங்களில் பொருப்பேற்று ஜனநாயக வழியில் தலைவராக உயர்ந்திருக்கிறார். உங்கள் மகன் அன்புமணியின் நிலமையை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் புரியும். உழைப்பே இல்லாமல் பதவிக்கு வந்தவர் யார் என்று. 

ராமதாஸ் : 1989-ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு ஏற்படுத்தப்பட்ட பிறகு தனி ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. போராடி வந்தது. 30 ஆண்டுகளாக அந்தப் போராட்டம் தொடருகிறது. அதன்பின் 12 ஆண்டுகள்  திமுக ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க திமுகவுக்கு மனம் வரவில்லை. 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்கலாம்  என்று ஆணையிட்டது. அதன்படி தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துமாறு 28.10.2010 அன்று அப்போதைய முதலமைச்சர் கலைஞரை 27 சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்  சந்தித்து வலியுறுத்தினேன். ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அவர் நடத்தவில்லை. காரணம்..... அத்தகைய கணக்கெடுப்பை நடத்தினால் வன்னியர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் தான். அதுமட்டுமின்றி, 30.07.2010 அன்று முரசொலியில் எழுதிய கடிதத்தில், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று வெளிப்படையாகவே  கலைஞர் அறிவித்தார். அப்படிப்பட்ட திமுக, இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு இணையானது தான்.

DMK Gnanamurthy statements against PMK Ramadoss
போராளி : இட ஒதுக்கீட்டுக்காக சிறை செல்லும் போராட்டம் 1988முன் நடந்தது தானே. அதன்பிறகு இன்றுவரை ஒருபோராட்டமும் இட ஒதுக்கீடு கேட்டு நடத்தவே இல்லையே. உங்கள் கூற்றுப்படி கலைஞர் தரவில்லை என்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் கூட்டணி வைத்த ஜெயலலிதாவிடம் கேட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு பெற்றிருக்கலாமே ஏன் பெறவில்லை. ஜெயலலிதா என்றால் நடுக்கமா?
 
ராமதாஸ் : 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் பொற்கோ சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், ராஜ்மோகன் என்ற இ.கா.ப அதிகாரி தமிழக காவல்துறை தலைமை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.  இதன்மூலம் 1967 முதல் 1996 வரை திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த எவரையும் துணைவேந்தராகவோ, காவல்துறை தலைமை இயக்குனராகவோ நியமிக்கவில்லை என்பதை ஸ்டாலின் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஸ்டாலினால் குறிப்பிடப்பட்ட இவர்களின் நியமனமும், பின்னாளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக திரு.காசி விஸ்வநாதன் நியமிக்கப் பட்டதும் எனது வலியுறுத்தலின் பெயரில் தான் நடந்தது என்பதும் மு.க.ஸ்டாலின் அறியாத உண்மை.
 

போராளி : உயர் அதிகாரிகளை பணியில் அமர்த்தியது உங்களின் சிபாரிசுதான் என மார்தட்டும் மருத்துவரே உங்கள் அக்காள் மகன் கரூர் டிஎஸ்பி ஆக இருந்த இராதாகிருஷ்ணன் என்பவரை பதவி உயர்வு கொடுத்ததும் உங்கள் சிபாரிசுதானே. உங்கள் மகன் அன்புமணியை மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய சுகாதாரத்துறையை கலைஞர் வாங்கிக்கொடுத்தாரே அதுவும் உங்கள் சிபாரிசுதானே. உங்கள் சம்பந்தி டாக்டர் ராஜசேகரன் அவர்களை மத்திய சுகாதாரத்துறை இயக்குனராக நியமிக்க செய்தாரே கலைஞர் அதுவும் உங்கள் சிபாரிசுதானே. 
DMK Gnanamurthy statements against PMK Ramadoss

ராமதாஸ் : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் கூட வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் போராடித் தான் பெற வேண்டியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததை சுட்டிக்காட்டி, வன்னியர் ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று கலைஞரிடம் வலியுறுத்தி வந்தேன். 2000&ஆவது ஆண்டில் 8 நீதிபதிகள் நியமிக்கப்பட்டபோது, வன்னியர்களுக்கு வாய்ப்ப்பளிக்க மறுத்து விட்ட கலைஞர், அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவரும், உறவினருமான ரவிராஜ பாண்டியன் என்பவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார். அதன்பின் இப்படி துரோகம் செய்து விட்டீர்களே? என கலைஞரிடம் சண்டையிட்ட பிறகு தான் 2001-ஆம் ஆண்டில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த குலசேகரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறாக திமுக ஆட்சிக்காலத்தில் வன்னியர்களுக்கான உரிமைகள் அனைத்தையும் கலைஞரிடம் சண்டையிட்டு தான் பெற்றுத் தந்தேன்.

போராளி : கலைஞரிடம் சண்டையிட்டு பல பதவிகளை வன்னியர்களுக்கு பெற்றுத்தந்த நீங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, இப்போது கூட்டணி வைத்துள்ளீர்களே எடப்பாடி பழனிசாமி ஆகிய இவர்களிடம் சண்டைபோட்டு அல்லது சண்டை போடாமல் எத்தனை பதவிகளை வன்னியர் களுக்கு வாங்கி கொடுத்துள்ளீர்கள். கொஞ்சம் பட்டியலை அறிவியுங்களேன்.  

Follow Us:
Download App:
  • android
  • ios