நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சராமரியாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் பிரிவினை, குடியுரிமை திருத்தச்சட்டம், முத்தலாக் விவகாரம் என பலதரப்பட்ட விவகாரங்களில் திமுக நாட்டின் நலனுக்காக எடுக்கப்படும் விவகாரங்களுக்கு எதிராக நின்று போராட்டட்டங்களை நடத்தி வருகிறது. சிறுபான்மையினரின் வாக்குகளை கவரும் வகையில் தவறான வழியில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பயணிப்பதாக அவ்வப்போது சர்ச்சிகையில் சிக்குவதுண்டு.

 

இந்நிலையில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக உரையாற்றிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ‘’நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது. தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக திமுக உள்ளது. தேசிய முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பவர்களுக்கு தமிழக பாஜக பதிலடி கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.