திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வீட்டில் 10 சவரன் நகை திருடு போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் பகுதியில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் வீடு அமைந்துள்ளது.கடந்த புதன்கிழமை அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 4 தங்க வளையல், பிரேஸ்லெட் என 10 சவரன் நகை காணாமல் போயின. வீடு முழுக்க எங்கு தேடியும் நகை கிடைக்கவில்லை. உடனே அன்பழகனின் உதவியாளர் நடராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இதையடுத்து பேராசிரியர் அன்பழகன் வீட்டில் வேலை செய்து வரும் அனைவரிடமும் விசாரணை செய்தனர். அதில் வில்லிவாகத்தை சேர்ந்த நளினி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் வேலைக்கார பெண் நளினி நகையை எடுத்துக் கொண்டதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்த அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.