திமுக தலைவராக நான் பொறுப்பேற்றதை பார்க்க கருணாநிதி இல்லையே என்பதே எனது ஒரே குறை என ஸ்டாலின் கூறியுள்ளார். நான் கருணாநிதியில்லை, அவரை போல் எனக்குப் பேச தெரியாது, பேசவும் முடியாது என்று உரையாற்றியுள்ளார். திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன். நீங்கள் பார்க்கும், கேட்கும் ஸ்டாலின் வேறொருவன். சொந்த நலன்களை மறந்து தமிழக மக்களின் நலனுக்காக ஒன்று சேர்ந்து உழைப்போம் என்று தெரிவித்தார். 

எனது பெரியப்பா பேராசிரியர் அன்பழகன், பெரியப்பாவிடம் நல்ல பெயர் பெறுவது 200 மடங்கு சமம். மேலும் அப்பா இல்லாத குறையை அவர் நிரப்புகிறார் என்றும் ஸ்டாலின் கூறினார். திமுக பொதுக்குழுவில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இதனால் பாஜகவுடன் திமுக கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய அரசியலில் மாநில உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சுயமரியாதை அடகு வைக்கப்பட்டுள்ளது. கூறு போட்டு கொள்ளை அடிக்கும் அரசு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து மீட்பது நமது முதல் கடமையாக இருக்கும். கொள்கையே இல்லாத சில கட்சிகள் உள்ளது. தமிழக ஆட்சியை பார்க்கையில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று எண்ணம் தோன்றுகிறது என்றார். 

தமிழகத்தின் கனவை நிறைவேற்ற வாருங்கள். முன்னேற்றம் காண, மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா, மாநில அரசை தூக்கி எறிய வா. நாம் அனைவரும் சேர்ந்தே செல்வோம். கட்சியே எனது குடும்பம் என்று ஸ்டாலின் உரை நிகழ்த்தியுள்ளார். இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசை தூக்கி ஏறிய வேண்டும் என்று மிக கடுமையாக பேசினார். தனி மனித சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும் என கூறிய ஸ்டாலின், கையாலாகாத தமிழக அரசையும் தூக்கி ஏறிய வேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.