வருகிற 9ம் தேதி கூடும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் யாரும் செல்போன்களை எடுத்து செல்லக்கூடாது என்று கட்சி தலைமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9-ம் தேதி காணொலி காட்சி வழியாக நடக்கிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தபடியே பொதுக்குழு உறுப்பினர்கள், காணொலி வழியாக நடக்கும் பொதுக்குழுவில் பங்கேற்கின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மாவட்டங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருந்தபடியே, நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 

இந்த அழைப்பு பெற்றவர்கள் மட்டுமே கூட்டரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். யாரும் செல்போன் எடுத்து செல்லக்கூடாது என திமுக தலைமை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. திமுகவின் 71 ஆண்டு கால வரலாற்றில் காணொலி மூலம் பொதுக்குழு கூட்டப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.