48 ஆண்டுகளில் கருணாநிதி இல்லாத திமுக  பொதுக்குழு இன்று கூடுகிறது ,  கடிதம் மூலம் மட்டுமே தலைவர் தனது எண்ணங்களை  உரையாக்குகிறார்.

திமுக என்றால் (தி)ருக்குவளை .(மு).(க)ருணாநிதி என்று திமுகவுக்குள் தொண்டர்கள் குறிப்பிடுவார்க. ஆனால் இது ஒரு வகையில் உண்மையே. இது மிகைப்படுத்தப்பட்ட விஷயமல்ல. 


திமுகவையும் கருணாநிதியையும் பிரித்து பார்க்கும் வயாதும் அனுபபவமும் உள்ளவர்கள் இன்று யாரும் இல்லை. இன்று 60 வயதை கடந்தவர்கள் கூட திமுக என்றால் கருணாநிதி , கருணாநிதி என்றால் திமுக என்று பார்த்தவர்கள் தான் அதிகம்.


ஏறத்தாழ 68 ஆண்டுகள் வயதான திமுகவை விட 25 வயதுகள் மூத்தவர் கருணாநிதி. 1949 ஆம் ஆண்டு திகவிலிருந்து திமுக பிரிந்து துவக்கப்பட்டபோது 25 வயது இளைஞரான கருணாநிதிகூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் இப்படி ஒரு பந்தம் தனாக்கும் திமுகவுக்கும் இருக்கும் வளரும் என்று. 


அதே அளவு வயதும் அனுபவமும் பேராசிரியருக்கு உண்டு என்றாலும் வழிநடத்தும் தளபதியாய் இக்கட்டான நேரத்தில் கட்சியை கொண்டு சென்ற பெருமை கருணாநிதிக்கு உண்டு. திமுகவின் முதுகெலும்பும் மூளையும் அவரே. இயக்கமும், இயக்கியவரும் அவரே. 
அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி திமுகவின் தலைவரானார். அதுவரை பொதுச்செயலாளர் பதவி சக்திமிக்கதாக இருந்தது அதன் பின்னர் தானாகவே நடைமுறையில் அது தலைவர் அந்தஸ்த்துக்கு மாறியது. 1969 ல் தலைவராக முடிசூட்டிய கருணாநிதி அதன் பின்னர் திமுக தலைவராக 48 ஆண்டு காலம் பொதுக்குழுவிற்கு தலைமை தாங்கியுள்ளார். 


அவர் ஆற்றிய உரைகள் , கொடுத்த வழிகாட்டுதல்கள் என பொதுக்குழு கலை கட்டிய காலம் உண்டு. எந்த சூழ்நிலையிலும் கட்சிப்பணியில் தனது பங்களிப்பை ஊசி முனை அளவு கூட விடாமல் பங்காற்றியவார் கருணாநிதி.


அவர் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுக்களை மட்டுமே  இதுவரை கண்டிருக்க இன்று நடக்கும் பொதுக்குழுவிற்கு தனது உடல்நிலை காரணமாக இயலாமையால் வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கருணாநிதி. 
48 ஆண்டுகால சரித்திரத்தில் இது போன்றதொரு நிகழ்வை திமுக என்ற இயக்கம் சந்தித்ததில்லை. தலைவராக தனது எண்ணங்களை எழுத்து வடிவில் கடிதமாக அளிக்க இருக்கிறார். அவருடைய எண்ணமெல்லாம் பொதுக்குழுவை சுற்றியே இருக்கும். 
திமுக தலைவர் இல்லாத பொதுக்குழு நடப்பது அவரை அறிந்தவர்களுக்கும் , அவரது முக்கியத்துவம் தெரிந்தவர்களுக்கும் வருத்தமான விஷயமே.