48 ஆண்டுகளில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்காத முதல் பொதுகுழு கூட்டம் தற்போது துவங்கிஉள்ளது 

அக்கட்சியின்  பொருளாளர் ஸ்டாலினை முன்னிலை படுத்தி நடத்தப்படும் இந்த கூட்டத்தில்அவர் திமுகவின் செயல்தலைவராக தேர்ந்தேடுக்கபடுகிறார்

இதனால் சுமார்15 ஆண்டு கனவு முழுவதுமாக இல்லாவிட்டாலும் பெரும்பகுதி அதாவது 90%ஆசை எண்ணம் விருப்பம் எல்லாம் கைகூடுகிறது ஸ்டாலினுக்கு 

தலைவர் பதவி தான் குறி என்றாலும் முழு அதிகாரத்தையும் தான் கட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே செயல் தலைவர் பதவி ஏற்க ஒத்து கொண்டாராம் ஸ்டாலின் 

இனிமேல் அழகிரியோ அல்லது கனிமொழியோ கட்சியில் ஸ்டாலினை கேட்காமல் எதையும் செய்ய முடியாது என்கின்றனர் திமுகவின் உள்விவரம் அறிந்தவர்கள் 

இருப்பினும் கனிமொழியை பொறுத்தவரை கருணாநிதி மற்றும் அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரின் ஆதரவோடு துணை பொதுசெயலாளர் பதவியை பெற்று விடுவர் என்றும் கூறபடுகிறது