5 மாத ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து 1 ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தது திமுக.. எடப்பாடி பழனிச்சாமி பகீர்.
ஐந்து மாத ஆட்சியில் அடிக்கப்பட்ட கொல்லை பணத்தை வைத்துதான் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடுமாறு தமிழக ஆளுநரிடம் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நடக்க வேண்டும் என்றுதான் தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் தேர்தல் ஆணையத்தையும், நீதி மன்றத்தை நாடினோம், நீதிமன்றமும் அதிமுகவின் கோரிக்கை நியாயமானது என்றும், தேர்தல் ஆணையம் தேர்தல் நேர்மையாக, நியாயமாக நடத்த வேண்டும் என கூறியது.
இதையும் படியுங்கள்: " நெல் கொள்முதலில் மெகா கொள்ளை... மௌனம் காக்கும் மந்திரிகள் " மநீம பகீர்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளது. குறிப்பாக அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக வேட்பாளர்கள் வெற்றி தாமதமாக அறிவித்தனர், ஆனால் திமுகவின் வெற்றியோ உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது. எனவே உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும், அதேவேளை நகர்ப்புற தேர்தலை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடத்தவேண்டும், ஐந்து மாத ஆட்சியில் அடிக்கப்பட்ட கொல்லை பணத்தை வைத்துதான் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இதையும் படியுங்கள்: கல்யாண ராமனை கைது செய்தபோது, வாரண்ட் கேட்டு போலீசை தெறிக்கவிட்ட பாஜக பெண் .. காவல் ஆணையரகத்தில் கதறல்.
சசிகலா ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சல் செலுத்தியது குறித்தும், அதிமுகவை கைப் பற்ற அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது, அவர் காட்சியிலேயே கிடையாது. அவர் சொல்வதை, பேசுவதெல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதில்லை. சூரியனை பார்த்து... ஏதோ சொல்வார்கள் நான் அதை வெளிப்படையாக கூறிமுடியாது என்றார். திமுகவின் 100 நாள் சாதனை விலைவாசி உயர்ந்ததுதான் என்ற அவர், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் ஆளும் கட்சியினர் வாக்குப்பெட்டிகளை மாற்றிய காட்சிகள் வெளியாகியுள்ளது என்றார். இதுதான் திமுக ஆட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் லட்சணம் என அவர் சாடினார்.