திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பன் என்ற அருண்குமார். இவர் திண்டுக்கல் மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களும் செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு சிலரிடையே முன்பகை இருந்து வந்தாக கூறப்படுகிறது.


இந்நிலையில் இன்று 22.10.20 இரவு மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே அருண் வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். இதில் அருண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டுப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.போலீசர்.. இந்த கொலை சம்பவத்திற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமா?என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.