Asianet News TamilAsianet News Tamil

ரூ. 1700 கோடி நிதி எங்கே போனதுனே தெரியல... பாலாற்றை பார்வையிட்ட துரைமுருகன் கேள்வி...! 

DMK ex-minister Thuramurugan said that we could not build 10 sanctions across Palar after the AIADMK regime changed.
DMK ex-minister Thuramurugan said that we could not build 10 sanctions across Palar after the AIADMK regime changed.
Author
First Published Oct 16, 2017, 3:58 PM IST


அதிமுக ஆட்சி மாறியதால் பாலாற்றின் குறுக்கே எங்களால் 10 தடுப்பணைகள் கட்ட முடியவில்லை என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் பாலாறு பாலம் உடையும் நிலையில் உள்ளதாகவும் இதை பராமரிக்க டெண்டர் எடுத்தவர்கள் அதை சரியாக பராமரிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். 

அம்மா இட்லி சாப்பிட்டார் என்று கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொய் சொல்லமாட்டார்  எனவும் டெங்குவால் யாரும் இறக்கவில்லை என அவர் கூறுவது வியப்பாக உள்ளது எனவும் தெரிவித்தார். 

பாலாற்றில் வெள்ள நீர் வீணாகாமல் இருக்க பாலாறு தமிழகத்தில் தொடங்கும் இடம் முதல் முடியும் இடம்வரை ரூ.1700 கோடி நிதியில் 10 தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து திட்டமிட்டோம் எனவும் ஆனால் ஆட்சி மாறியதால் அதனை செயல்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios