திமுக சார்பில் தென்காசி தொகுதிக்குட்பட்ட ராஜபாளையத்தில் திமுக செயல்வீரகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பங்கேற்று பேசினார். சர்ச்சையாக அவர் பேசிய பேச்சின் ஒரு பகுதி: 
“இங்கே சிறுபான்மையின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறீர்கள். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் திருநீறுகூட பூசி ஏமாற்றிவிடுவோம். ஆனால், முஸ்லீம், கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் நீங்க இருக்க வேண்டுமென்றால், மோடியை ஓடஓட விரட்ட வேண்டும். அந்த வேலை எங்களைவிட உங்களுக்குத்தான் அதிகம். நாங்கள் எல்லோரும் விபூதி பூசி ஏமாற்றிவிடுவோம். நீங்கள் அப்படி ஏமாற்ற முடியாது. நீங்கள் குல்லா போட்டிருப்பீர்கள் என்பதால் கண்டுபிடித்துவிடுவார்கள். மோடியை விரட்ட வேண்டிய பொறுப்பு உங்களுடையது” என்று பேசியிருக்கிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.   
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றிக்காக அவருடைய அம்மா ராஜாத்தியம்மாள் கோயில் கோயிலாகச் சென்றுவருவதாக சமூக ஊடகங்களில் அதிமுக - பாஜக ஆதரவாளர்கள் விமர்சித்துவருகிறார்கள். இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியிருக்கும் பேச்சு பாஜகவினருக்கு அவல் கொடுத்த கதையாகி இருக்கிறது.
மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து பேசியிருப்பாரோ?!