தமிழகத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் மின்தடை ஏற்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் தான் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உள்ளன.
திமுக அரசு நிறைவேற்றியதாக கூறும் 202 அறிவிப்புகளில் எந்த திட்டமும் மக்களிடம் சென்றடையவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.பி.உதயகுமார்;- தமிழக முதல்வர் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். 202 வாக்குறுதிகள் என்பது, வெங்காயத்தை உரித்தால் அதன் தோலும், கண்ணீரும் தான் மிச்சம் என்பது போல வேறு ஒன்றுமில்லை. 202 திட்டங்களில்எதுவும் மக்களை சென்றடையவில்லை என விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் மின்தடை ஏற்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் தான் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் உள்ளன.

உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை சரியாக நடைபெற வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். தேர்தல் பார்வையாளர் நடுநிலையோடு இருக்க வேண்டும். காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
