சபாஷ் சரியான போட்டி..! செட் ஆப் பாக்ஸ் குறித்து சூப்பர் விஷயம்.. அதிரடி காட்டும் துரைமுருகன்..! 

சட்டப் பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் முருகன்  திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு செட் ஆப் பாக்ஸ் வழங்கப்படும் என அதிரடியாக பேசி உள்ளார்.

சட்டப்பேரவையில் நடந்த பட்ஜெட் உரையின் போது, துரைமுருகன் இவ்வாறு தெரிவித்தார். அதாவது, அதிமுக உறுப்பினர் இன்பதுரை, திமுக ஆட்சியில் இலவச தொலைக்காட்சி பெட்டி கொடுத்தாலும்  கூட, மின்சாரத்தை வழங்கியது அதிமுக தான் என பெருமையாக பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், அடுத்து வேறு ஒரு திட்டம் கூட உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் விவாதத்தின் இடையே குறுக்கிட்டு பேசிய துரைமுருகன், " நீங்கள் சொல்வது உண்மைதான். அன்று கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி இன்றளவும் மக்கள் பயன்பாட்டில் வைத்து வருகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால், செட் ஆப் பாக்ஸ் கூட வழங்கப்படும் என அதிரடி கருத்தை வெளிப்படுத்தினார் துரைமுருகன்.