ஸ்டாலினால் அசிங்கப்படும் திருமாவளவன்! ஆர்.எஸ்.பாரதி போட்ட நாடகம்: தி.மு.க. கூட்டணியில் எரியும் சாதி தீ!

சமத்துவ பெரியார்! என்று கருணாநிதியை மனம் மகிழ அழைத்தவர் திருமாவளவன். அந்த பெரியாரின் மகன் ஆளும் தி.மு.க.வில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய அவமானம் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் எனும் இரண்டு மிக முக்கிய பதவிகளில் இருக்கும் நபரால். 
 

Dmk drives out Thiruma for Ramadass?

சமத்துவ பெரியார்! என்று கருணாநிதியை மனம் மகிழ அழைத்தவர் திருமாவளவன். அந்த பெரியாரின் மகன் ஆளும் தி.மு.க.வில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய அவமானம் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் எனும் இரண்டு மிக முக்கிய பதவிகளில் இருக்கும் நபரால். 

‘பட்டியல் வகுப்பினை சேர்ந்த வகுப்பினரில் ஏழெட்டு பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளானது திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று ஆர்.எஸ்.பாரதி பேசியது தி.மு.க. கூட்டணிக்குள் பற்றி எரிகிறது. பாரதியின் பேச்சைப் பார்த்துவிட்டு, ’வருத்தம் தெரிவியுங்க!’ என்று ஸ்டாலின் சொல்ல, ‘தலைவர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வருத்தம் தெரிவிக்கிறேன்!’ என்று பாரதி சொல்ல, தி.மு.க. அளவில் இந்த விவகாரம் ஊத்தி மூடப்பட்டுவிட்டது. ஆனால் வெளியே கொந்தளித்து எரிகிறது. 

Dmk drives out Thiruma for Ramadass?

பாரதியின் பேச்சு முழுக்க முழுக்க கூட்டணி அரசியல் சார்ந்ததே! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அவர்களிடம் நாம் பேசியபோது ”பாரதியின் இந்த பேச்சை தி.மு.க. முக்கியஸ்தர்களே துளியும் ரசிக்கவில்லை. கடும் கோபத்தில் இருக்கிறார்கள் அவர் மேல். ஆனால்  பாரதியும் தன் விருப்பத்தில் இதை பேசவில்லை. இப்படியெல்லாம் அவர் பேச வேண்டிய சூழல் 

அதாவது நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி வைத்து, அற்புதமாக வென்ற தி.மு.க., எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை எதிர்பார்க்கிறது. எச்சூழலிலும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்துடவே கூடாது! என்பதுதான் ஸ்டாலினின் வெறி இலக்கு. இதற்காக கூட்டணியில் சில மாறுதல்களை பண்ண விரும்புறார். சிம்பிளா சொல்றதுன்னா சில கட்சிகளை களையாக நினைக்கிறார். அதில் முக்கியமானதும், முதலில் நிற்பதும் அவரைப் பொறுத்த வரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான்.

Dmk drives out Thiruma for Ramadass?

ஸ்டாலினுக்கும், திருமாவுக்கும் என்றுமே ஆகாது. கருணாநிதி இருக்கும்போதே இதுதான் நிலை. அவருக்கு பிறகு திருமாவை முழுமையாக வெறுக்கிறார் ஸ்டாலின். அதுக்கு பல காரணங்கள் இருக்குது. முக்கியமா, 2016 சட்டமன்ற தேர்தலில் திருமா உள்ளிட்டோர் ‘மக்கள் நல கூட்டணி’ வைத்து வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால் தி.மு.க. நிச்சயம் வென்றிருக்கும் அப்படிங்கிறது ஸ்டாலினின் நம்பிக்கை. இதைக் கெடுத்ததில் முக்கியமானவர் திருமாவும், வைகோவும். அதனாலதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக துரைமுருகனை வைத்து ‘ம.தி.மு.க. மற்றும் வி.சி.க. இவர்கள் எங்களின் நண்பர்களே. கூட்டணி கட்சியினரில்லை’ அப்படின்னு ஒரு வெடி ஸ்டேட்மெண்டை கொடுக்க வைத்து, அலறியடித்து அறிவாலயத்துக்கு வரவெச்சார். பழைய பாசத்தில் வைகோவை முழுமையாக ஏத்துக்கிட்டார் ஸ்டாலின். ஆனால் திருமாவோடு ஒட்டவேயில்லை. திருமாவும் வைகோ அளவுக்கு  ஸ்டாலினிடம் இறங்கிப் போய் பாசமழை பொழியலை. 

ஆக வேண்டா வெறுப்பாகத்தான் இந்த கட்சியை கூட்டணியில் இணைத்தார் ஸ்டாலின். சிதம்பரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன்னு திருமா சொன்னது ஸ்டாலினுக்கு பெரிய எரிச்சல். 

Dmk drives out Thiruma for Ramadass?

என்னதான் கூட்டணியில் இருந்தாலும் இரண்டு கட்சிகளின் இணையதள அணியும் சர்வகாலமும் உரசிக்கிட்டும், மோதிக்கிட்டும்தான் இருக்கிறாங்க. இந்த நிலையில்தான் எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கு கூட்டணியை கிட்டத்தட்ட இறுதி பண்ணிடுச்சு தி.மு.க. தங்களோட அரசியல் ஆலோசகரான ஐபேக் பிரஷாந்த் கிஷோரின் உத்தரவின் படி எப்படியாவது சில கட்சிகளை கழட்டிவிட்டுட்டு, சில கட்சிகளை சேர்க்க வேண்டிய முனைப்பில் இருக்கிறார் ஸ்டாலின். கழட்டிவிடப்பட வேண்டிய கட்சிகளில் முதலில் அவர் டிக் பண்ணியிருப்பது விடுதலை சிறுத்தைகளை. 

அதற்குப் பதிலாக பா.ம.க.வை உள்ளே இழுக்கும் முடிவில் இருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய சீட் வாய்ப்புகள் இல்லா நிலையும், அ.தி.மு.க - பா.ஜ.க.  கூட்டணிக்கு மக்களிடத்தில் ஆதரவு இல்லாத நிலையும் இருப்பதாக ராமதாஸ் நினைப்பதால் மீண்டும் தி.மு.க. கூட்டணிகு வரும் முடிவில் இருக்கிறார். திருமா இருக்கும் ஒரு கூட்டணியில் ராமதாஸ் நிச்சயம் இருக்க மாட்டார். அதேவேளையில் தனக்கு ராமதாஸின் கூட்டு வேண்டும்! அதனால்தான் சிறுத்தைகளை அசிங்கப்படுத்தி, தானாகவே முறைத்துக் கொண்டு வெளியேற வைக்கும் முயற்சியில் இறங்கிடுச்சு தி.மு.க. அதன் வெளிப்பாடுதான் பாரதியின் இந்த அவலப்பேச்சு. 

Dmk drives out Thiruma for Ramadass?

அவங்க எதிர்பார்த்த மாதிரியே இதுக்கு திருமாவும் எதிர்குரல் கொடுக்க துவங்கிட்டார். ’நாங்கள் வெறும் கோஷம் போடும் கூட்டமல்ல. கோட்டையில் நாங்கள் கொடியேற்றும் நாள் வரும்.’ அப்படின்னு. இதைத்தான் தி.மு.க. தலைமையும் எதிர்பார்த்துச்சு. திருமா கட்சியின் மாநில நிர்வாகிகளும், ‘அசிங்கப்பட்டுட்டு இங்கே இருக்க வேணாம்னே. பேசாம இப்பவே வெளியில போயிடுவோம். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருஷமிருக்குது. அதுக்குள்ளே அரசியல் சூழல் பெருசா மாறி, நமக்கு நல்ல ஒரு இடம் கிடைக்கும்’ அப்படின்னு வலியுறுத்த ஆரம்பிச்சுட்டாங்க. 

பாரதியின் பேசுச்குப் பிறகு திருமாவின் முகம் நார்மலாகவே இல்லை. தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறிடலாமா? சகிச்சுட்டு இருந்தாலும் அவர்களின் டார்ச்சர் தொடரும், மிக கேவலமான எண்ணிக்கையில்தான் சீட் கொடுப்பாங்க, கிடைச்ச இடத்துலேயும் பிரசார ஒத்துழைப்பு கொடுக்காம தோற்கடிக்கத்தான் பார்ப்பாங்க.’ன்னு நெருங்கிய நண்பர்களிடம் புலம்பி ஆலோசிக்க துவங்கிட்டார். 

ஆக தி.மு.க. தலைமை பீடத்தின் எண்ணம் பலிக்க துவங்கிடுச்சு.” என்கிறார்கள். 

ஆனால் தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர்களோ இதை முழுமையாக மறுத்து “ஆர்.எஸ்.பாரதி பேசினது அவரோட தனிப்பட்ட எண்ணம். ஆனால் அவரோட பர்ஷனல் பேச்சு கட்சிக்கு சிக்கலை தந்ததாலே உடனே  வருத்தம் தெரிவிக்க வெச்சார்  தளபதி. அதனால திட்டம் போட்டு திருமாவை அசிங்கப்படுத்துறோம்னு வதந்தி கிளப்ப வேண்டாம்!” என்கிறார்கள்.
சர்தான்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios