வெட்டவெளிச்சமான திமுகவின் இரட்டை வேடம்.. ஆளுங்கட்சியை போட்டு தாக்கும் டிடிவி.தினகரன்..!
திராவிடமாடல், மாநில சுயாட்சி, மாநில உரிமை என்று உதட்டளவில் மட்டுமே திமுக அரசு பேசி வருகிறது என்பதற்கு மற்றும் ஒரு உதாரணமாக மாநில கல்விக்கொள்கை விவகாரத்தில் திமுக அரசு செயல்பட்டு வந்திருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.
திராவிடமாடல், மாநில சுயாட்சி, மாநில உரிமை என்று உதட்டளவில் மட்டுமே திமுக அரசு பேசி வருகிறது என்பதற்கு மற்றும் ஒரு உதாரணமாக மாநில கல்விக்கொள்கை விவகாரத்தில் திமுக அரசு செயல்பட்டு வந்திருக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மாநிலக் கல்விக் கொள்கைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திரு. ஜவஹர் நேசன் அவர்கள் பதவி விலகியதன் மூலம் மத்திய அரசின் கல்விக்கொள்கையை செயல்படுத்த மாட்டோம் என கூறி மாநிலக் கல்வி கொள்கை குறித்து ஆராய்வதாக திமுக அரசு மேற்கொண்ட இரட்டை வேடம் அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை வெளியான உடன் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல நடித்த திமுக அரசு, சில மாதங்கள் கழித்து அதற்கு இசைவாக 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வு முறையில் மாற்றங்களை மேற்கொண்டபோதே அதற்கு அமமுக எதிர்ப்புத் தெரிவித்தது.
மாநிலக் கல்வி கொள்கை குழுவில் இருந்து விலகியுள்ள திரு. ஜவஹர் நேசன் அவர்கள், கார்ப்பரேட் கல்விக்கொள்கையையே மாநில கல்விக்கொள்கையாக மாற்றும்படி அதிகாரிகளைக் கொண்டு திமுக ஆட்சியாளர்கள் மிரட்டுவதால் ராஜினாமா செய்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
தேசிய கல்விக்கொள்கை 2020-ன் அடியைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச்சென்று கொண்டிருக்கிறது என்றும், இந்நிலை நீடித்தால், தமிழ்ச் சமூகத்தின் உயரிய விழுமியங்களுக்கு எதிராக கல்வி கொள்கையின் விளைவுகள் இருக்கும் என அஞ்சுவதாக பேராசிரியர் திரு. ஜவஹர் நேசன் அவர்கள் கூறியிருப்பதை புறந்தள்ளி விட முடியாது.
திராவிடமாடல், மாநில சுயாட்சி, மாநில உரிமை என்று உதட்டளவில் மட்டுமே திமுக அரசு பேசி வருகிறது என்பதற்கு மற்றும் ஒரு உதாரணமாக மாநில கல்விக்கொள்கை விவகாரத்தில் திமுக அரசு செயல்பட்டு வந்திருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.
இனியும் திமுக அரசு மக்களை ஏமாற்றாமல் தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் வெளிப்படையான முடிவை அறிவிக்க வேண்டும். மாநில கல்விக்கொள்கை குழுவை சீரமைத்து குழுவில் உள்ளோர் சுதந்திரமாக முடிவு எடுக்க அனுமதித்து, மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.