Asianet News TamilAsianet News Tamil

திமுகவுக்கு எதிர் கட்சி அந்தஸ்த்துகூட கிடைக்காது..!! கிளிஜோசியர் ஸ்டாலின்... ஓங்கி குத்திய அமைச்சர்..!!

இதன் மூலம் எட்டரை கோடி மக்களுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக முதலமைச்சர் இருந்துவருகிறார் என்பது உறுதியாகி உள்ளது. நமது இயக்கம் 100 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என அம்மா கூறினார்.

DMK does not even get opposition party status,minister rb udyakumar..
Author
Chennai, First Published Oct 24, 2020, 11:46 AM IST

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது.  கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் மதுரை மேற்கு மாவட்ட கழக செயலாளரும் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே முதன்முதலில் அரசியல் வரலாற்றில் தகவல் தொழில்நுட்ப பிரிவை உருவாக்கி தந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இப்போது முதலமைச்சரும் துணை முதலமைச்சர் அதற்கான நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். 

DMK does not even get opposition party status,minister rb udyakumar..

நீங்கள் அனைவரும் அதிமுக இயக்கத்தின் அம்பாசிடராக இருந்து அதிமுக அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். அதை நீங்கள் முறியடிக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்துள்ளார். அதனை செல்பேசி வாயிலாக அனைவரிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும். முதல்வர் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உடனே மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை நீங்கள் செய்ய வேண்டும். இதுவரை உலகில் எந்த முதலமைச்சரும் அறிவிக்காத வகையில் கொரோனா நோய்தொற்று குணமடைய, மருந்து கண்டுபிடித்தவுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசு செலவில் தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

DMK does not even get opposition party status,minister rb udyakumar..

இதன் மூலம் எட்டரை கோடி மக்களுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக முதலமைச்சர் இருந்துவருகிறார் என்பது உறுதியாகி உள்ளது. நமது இயக்கம் 100 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என அம்மா கூறினார். அது நிச்சயம் நடக்கும், வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் அமோக வெற்றி பெற்று கழகத்தின் ஐம்பதாவது பொன்விழாவை ஆட்சி கட்டிலில் இருந்தபடியே கொண்டாடுவோம். ஆனால் இந்த இயக்கம் இன்று போகும், நாளை போகும் என்று கிளி ஜோசியம் சொன்னார் ஸ்டாலின், ஆனால் நாம் கோட்டைக்கு தான் சென்று கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட வராது என அவர் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios