dmk do not come to chief power by minister jayakumaar
6 மாதங்கள் இல்லை, 60 வருடங்கள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என நிதியமைச்சர் ஜெயக்குமார் பொறித்து தள்ளியுள்ளார்.
அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. பதவி ஆசையில் அதிமுக கட்சி சுக்கு நூறாக பிளவுற்று கிடக்கிறது.
முதலில் சசிகலா அணி ஒ.பி.எஸ் அணி என இரண்டாக பிளவடைந்தது. இதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஒரு பேரவையை உருவாக்க மூன்றாக பிளவு பட்டது.
அதைதொடர்ந்து இப்போது சசிகலா தரப்பிலேயே இரண்டாக உடைக்கப்பட்டுள்ளது அதிமுக.
இதையடுத்து தினகரன் தரப்பு எடப்பாடி தரப்பு என முட்டி மோதி வருகிறது.
இதனிடையே பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சி மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
அதேபோல், திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் அதிமுக ஆட்சி இன்னும் 6 மாதம் தான் எனவும், அதன்பின்னர், ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தி திமுக ஆட்சியை பிடிக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் துரைமுருகன் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய ஜெயக்குமார் கூறியதாவது :
மத்தியில் ஆட்சியில் இருந்தபோது திமுக தமிழகத்திற்கு என்ன கைமாறு செய்தது. திமுகவினர் அரசியல் ஆதாயத்திற்காக பேசுகின்றனர்.
17 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தே அவர்களால் தமிகத்திற்கு ஒன்றும் செய்யமுடியவில்லை.
அவர்கள் நினைத்திருந்தால் காவிரி பிரச்சனையை தீர்த்திருக்கலாம். அதை செய்யவில்லை.
பூனை கண்ண மூடிருச்சினா உலகமே இருண்டு போய் விடும் என்று நினைக்குமாம்.
அதுபோல துரைமுகன் பேச்சு தூங்கி கொண்டிருக்கும் அவர்கள் கட்சியினரை எழுப்ப சொல்லியிருப்பார். அதை நாம் பெரிது படுத்த வேண்டாம்.
6 மாதங்கள் இல்லை. 60 வருடங்கள் ஆனாலும் அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது. எத்தனை வருஷம் ஆனாலும் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
