நான் பொய் சொல்கிறேன் என்று அதற்காகத் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்கிறேன். இல்லை என்றால் திருமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும். தயாரா? என மாரிதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாரிதாஸ், ‘’’தமிழக மக்கள் அனைவருக்கும்: திருமுருகன் காந்தி நான் வெளியிட்ட ஆதாரங்களை பொய் என்று கூறியதாகத் தகவல். அவரிடம் சொல்லுங்கள் அவர் முதலாளி டைசன் இல்லை மார்டீன் இருவரில் ஒருவரை நான் வெளியிட்ட தகவல் பொய் என்று எழுத்து பூர்வமாக, அத்தோடு அந்த நிறுவனங்களின் உண்மை விவரங்களை வெளியிடச் சொல்லுங்கள். எது பொய் என்று மக்கள் மாணவர்கள் முடிவு செய்யட்டும். தயாரா?

திருமுருகன் காந்தி என்ன செய்ய வேண்டும் என்றால் இப்போது மரியாதையாக அந்த கம்பெனியின் விவரங்களை அதன் தகவல்களை அவர் முதலாளி டைசனிடம் வாங்கி வெளியிடவும். டைசன் DIN : 02250972 எண்ணில் உள்ள கம்பெனிகளில் SKYRIDE HI-TECH TOURS AND TRAVELS PRIVATE LIMITED, TEASEL MARKETING PRIVATE LIMITED, MARTIN WINDFARMS PRIVATE LIMITED, EARTHCRAFT CONSTRUCTIONS AND DEVELOPERSPRIVATE LIMITED, மற்றும் VAANAM CONSTRUCTIONS AND DEVELOPMENT PRIVATE LIMITED இந்த 5 நிறுவனங்கள் மட்டும் தான் நான் வெளியிட்டேன். 

அதன் விவரத்தை மட்டும் அவர் முதலாளி டைசன், மார்டீன் எவரையாது வெளியிடச் சொல்லவும். அவர்கள் வெளியிடும் விவரமும் எனக்குக் கிடைத்த விவரமும் தவறு என்றால் நான் பொய் சொல்கிறேன் என்று அதற்காகத் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்கிறேன். இல்லை என்றால் திருமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும். தயாரா?

எந்தவித சவாலுக்கும் நான் தயார். திருமுருகன் அவர்களை அந்த நிறுவனங்கள் சார்ந்த ஆதாரங்களை வெளியிடச் சொல்லுங்கள். பெரும் பூதத்தை நான் கிளப்புகிறேன். எனவே மக்கள் அனைவரும் தேச துரோகி திருமுருகனை பிடித்து இப்போது கேள்வியை எழுப்புங்கள். மே- 17 இயக்கத்தில் திருமுருகன் காந்தியுடன் இணைந்து செயல்பட்ட டைசன் மார்டீன் விவரம், பின்புலம் எல்லாம் திருமுருகனுக்குத் தெரியாது என்று வாதம் செய்யும் அப்பாவிகளுக்கு இந்த ஆதாரம் சமர்ப்பணம். (இந்த டைசன் மார்டீன் SKYRIDE HI-TECH TOURS AND TRAVELS PRIVATE LIMITED நிறுவனத்தில் உள்ள இந்த அருண்குமார் கூட யார் என்று உங்கள் தெரியாதா திருமுருகன்?)

கொஞ்சமாது தேடி அடிப்படை அறிவோடு சிந்திக்கவும். புரட்சி என்று சொல்லிவிட்டால், நக்கீரன் போன்ற பத்திரிக்கை வைத்து படம் காட்டினால் அவன் எல்லாம் போராளியா? கொஞ்சம் தேடி உண்மையை உணருங்கள். வேறு என்ன ஆதாரம் கொடுத்தால் இந்த பணக்கார ஹவாலா கூட்டத்துப் போலி போராளிகள் பற்றி நீங்கள் நம்புவீர்?

படித்தவர்கள் தானே? தேடி உண்மையை உணர்வதில் என்ன பிரச்சனை உங்களுக்கு? திமுக- திக தந்திரம் உங்களுக்குப் பிடிபடுவது கடினம். ஆனால், சொன்னாலும் புரிய மாட்டேன் என்பது என்னவிதமான வியாதி. இன்னுமா இந்த மே-17 கார்ப்பரேட் எதிர்ப்பு போராளியை இன்னுமா நம்புகிறீர்கள்?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.