திருவண்ணாமலை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் ஆர்.சிவானந்தம். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகச் செயலராக இருந்து வருகிறார். இவர் கடந்த 1996 மற்றும் 2006 நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் திமுக சார்பாக ஆரணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2014 பாராளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்ததார்.

இந்தநிலையில் பணமோசடியில் ஈடுபட்டதாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் 8 கோடி கடன் வாங்கி சிவானந்தன் திருப்பி கொடுக்கவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சிவானந்தத்தை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் மீது நிலமோசடி புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது.

சிவானந்தமும் அவரது மகன் பாபு ஆகியோர் ரியல் எஸ்டேட் மற்றும் அரிசி ஆலைகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டிருக்கும் சிவானந்தன் தற்போது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'வாடா.. செருப்பை கழட்டுடா..! சிறுவனை அழைத்து தனது காலனியை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...