காவி பாஜக கனவுகளை வீழ்த்துவோம் என்றும் 7 தமிழர்களை தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

காவி மயமாக்கும் மத்திய பாஜகவின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம். மேலும் தமிழக அரசுக்கு எதிராக வரும் 18-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும்.

 

 காவிரி நீர், கடைமடைப் பகுதிகளுக்கு செல்லவும், வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை, குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி டி.கே.ரஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.