கருணாநிதியின் உடல்நிலை குறித்த கேட்ட திமுக நிர்வாகி மாரடைப்பால் பலியாகி உள்ளார்.  

தனது கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்றுவந்த திமுக தலைவர் கருணாநிதி ஜூலை 28 நள்ளிரவு 1.30 மணி அளவில் மீண்டும் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு கோபாலபுரம் இல்லத்து வாசலில் எதையும் எதிர்பார்க்காமல் தங்கள் தலைவரின் நலத்தை மட்டுமே எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர் தொண்டர்கள். ‘கலைஞர் வாழ்க, கலைஞர் வாழ்க’  கதறி சத்தமிட்டுக்கொண்டிருன்தனர்.

சில மணித் துளிகளில் கோபாலபுரம் மாடி அறையிலிருந்து கருணாநிதியை ஸ்ட்ரெச்சரில் கீழே அழைத்துவந்தனர். தலைவா தலைவா என்று தொண்டர்கள் கதறினார்கள். நள்ளிரவு 1.30 மணி அளவில் ஆம்புலன்ஸில் திமுக தலைவர் கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கே அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.  

அதில், “திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி ஜூலை 28 அதிகாலை 1.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது ரத்த அழுத்தம் குறைந்ததை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவர் குழுவினர் அவரது ரத்த அழுத்தத்தை சீராக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். திமுக தலைவர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் கிடைத்ததும் ஏராளமான திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு இன்னும் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்த கேட்ட திமுக நிர்வாகி மாரடைப்பால் பலியாகி உள்ளார். முத்துப்பேட்டையை சேர்ந்த கட்சி நிர்வாகி தமீம் மாரடைப்பால் பலியாகி உள்ளார்.

அவர் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டறிந்துள்ளார். நேற்று கருணாநிதியின் உடல்நிலை மோசமானதை கேட்டதும் இவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த வேதனையில் நிர்வாகி தமீம் மாரடைப்பால் பலியாகி உள்ளார். இவருக்கு 50 வயது மட்டுமே ஆகியுள்ளது. இவர் தீவிரமான திமுக தொண்டர் என்று தகவல் வெளியாகி உள்ளது.