காஸிப்ஸ்! என்று ஆங்கிலத்தில் நாகரிகமாக (!?) அழைக்கப்படும் ’கிசுகிசு’க்களுக்கு இணையான மசாலா இந்த உலகில் எதுவுமெ இல்லை! எனலாம். அதிலும் சினிமாத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளைப் பற்றிய கிசுகிசுக்கள் என்றால் எத்தனை பக்கங்கள் எழுதினாலும் ஸ்க்ரோல் டவுன் செஞ்சு செஞ்சு படிக்கத் தூண்டுவது இயற்கை. 

அப்படி வெறித்தனமாக கிசுகிசுக்களை விரும்பும் மிகப்பெரிய நல் இதயங்களுக்காகவே இந்த கட்டுரை.....

தி.மு.க.வை கடந்த சில நாட்களாக தாறுமாறாக கலக்கிக் கொண்டிருக்கிறது ஒரு பஞ்சாயத்து. அது, அக்கட்சியின் டெல்லி முக்கியஸ்தர் ஒருவர் அநியாயத்துக்கு ’தாமரை பாசம்’ காட்டுவதைப் பற்றியதுதான். கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த விவகாரம்! என்கிறார்கள். தலைவர் வரைக்கும் போய், அவரும்  ஒரு விசாரணை குழுவை போடும் முடிவில் இருந்தாராம். ஆனால் அதற்குள் கழகத்தின் இரு எம்.எல்.ஏ.க்களின் மரணத்தால் அம்முடிவானது தள்ளிப் போயிருக்கிறது. 

தாமரை பாசத்தில் உருகி மருகும் அந்த மனிதர் யார்? அப்படி என்ன செய்கிறார்? என்று, இந்த விபரத்தை அறிந்த அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் கேட்டபோது....

”ஆக்சுவலா அவரு தி.மு.க.வின் சீனியர் புள்ளிதான். ஓரளவு விபரமான மனுஷன். இவரால கட்சி என்ன புண்ணியத்தை அடைஞ்சுதோ தெரியலை, கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக மனுஷனை முக்கிய பதவிகளிலேயே வெச்சிருக்காங்க.

அந்த கட்சிக்காக ஒரு மாமாங்கமா நாயா உழைச்சுட்டு இருக்கிற பலர் ஒரு மாங்காவை கூட வாங்கிட வழியில்லாம ஏழ்மையில கிடக்கிறாங்க. ஆனால், இவரோ செமத்தியா சொத்துக்களை சேர்த்துக் குவிச்சிருக்கார். ’ஒருவருக்கு ஒரு பதவி’ன்னு அடிக்கடி நியாயம் பேசும் தலைமை. ஆனால் இவரோட குடும்பத்தை கொஞ்சம் எட்டிப் பார்த்தால் கட்சியிலும், தேர்தல் மூலமாகவும் இவர் தரப்பு பெற்று வெச்சிருக்கிற அதிகாரங்கள் கண்ணை உறுத்தும். ஆனால் இதை சுட்டிக்காட்டவோ, தட்டிக்கேட்கவோ அல்லது தட்டிப் பறிக்கவோ யாருக்கும் தைரியமுமில்லை, தைரியம் உள்ளவங்களோட முதுகிலும் ஓவர் அழுக்கு இருக்கிறதாலே அவங்களும்  முன்வர்றதில்லை. 

டெல்லியில் கோலோச்சும் இந்த மனுஷன், இப்பல்லாம் அடிக்கடி  மத்தியமைச்சர்கள் சிலரை சந்திக்கும்  தகவலானது டெல்லியில் தி.மு.க. தலைவர் தனக்காக வைத்திருக்கும் தனியார் உளவு நிறுவனங்கள் மூலமாக வந்திருக்குது. ஏன் அப்படி சந்திக்கிறார்? என்று அவர் கேட்டதற்கு ‘கடல் தாண்டி தனக்கு இருக்கும் பெரிய முதலீடுகளை காப்பாத்திக்கவும், அதுல இருக்கிற சின்னச்சின்ன சிக்கல்களை தீர்த்துக்கவும்தான் இப்படி அதிகார மையங்களை அடிக்கடி சந்திச்சு கோரிக்கை வைக்கிறாராம் மனுஷன். ஆனா இதுவரைக்கும் அவருக்கு எந்த வகையிலும் உதவுறோம்னோ, பிரச்னைகளை சரி பண்ணி விடுறோம்னோ எந்த உறுதிமொழியையும் டெல்லி லாபி தரவேயில்லையாம். 

இந்த தகவலை தளபதிட்ட உளவு நிறுவன நபர்கள் சொன்னதும், ’தனக்கு உதவுறதுக்கு பிரதியுபகாரமா இவரு என்ன பண்ணுவார்?’ என்று கேட்க, ‘கட்சி ரகசியங்களை அங்கே சொல்லிட வாய்ப்பு இருக்குது.’ என்று பதில் வந்ததாம். 

ரத்தம் கொதிச்சிருக்கிறார் தளபதி. துக்க விஷயங்கள் முடிந்ததும், விசாரணை நடத்தப்படும். சந்திப்பு குற்றச்சாட்டுக்களை அவர் ஒப்புக்கிட்டா, கூடிய சீக்கிரம் அவர் பெரியளவில் டம்மியாக்கப்படலாம்னு அவங்க கட்சிக்குள்ளேயே பேசிக்கிறாங்க.

முன்னாள், இந்நாள் தலைவர்கள் அவரை ரொம்ப நம்புனாங்க, ஆனால் வேலையை காட்டிட்டார். பாலுன்னு நினைச்சால்  அவரென்னவோ பால்டாயிலா இருக்காரே!ன்னு பொங்குறாங்க அந்த கட்சிக்காரங்க.” என்று முடிக்கிறார்கள். 
கொடுமைதான் போங்க!