உடல்நலக்குறைவு காரணமாக கவலைக்கிடமாக இருந்த மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரின் இழப்பால் தமிழகமே வேதனையில் ஆழ்ந்திருக்கிறது. தமிழுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டுகள் பல. இதனால அவருக்கு தொண்டர்களும் பலர். எண்ணிலடங்கா இந்த தொண்டர்கள் வேதனையில் ஒரு புறம் துடித்துக்கொண்டிருக்கையில். அவரது ஆசையை நிறைவேற்ற போராடிக்கொண்டிருந்தது இன்னோரு கூட்டம்.
 அறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பியான கலைஞர் தன்னுடைய மரணத்திற்கு பிறகும் கூட அண்ணாவின் அருகிலேயே தான் புதைக்கப்பட வேண்டும் என விரும்பினார். 

ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதில் பெரிய தடையாக இருந்தது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு.
சட்டப்படி தான் எல்லாம் செய்ய முடியும் எனவே கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர முடியாது என அவர் மறுத்துவிடவே தொடர்ந்து கலைஞருக்காக போராடி வந்தனர் தொண்டர்கள். 
தொடர்ந்து அவசர கதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மெரினாவில் இடம் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் முடிவிற்காக தமிழகமே பேராவலுடன் காத்திருந்த இந்த தருணத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க தீர்ப்பு வந்தது. மரணத்திற்கு பிறகும் கூட போராட்டம் எனும் படி, தன் உயிரினும் மேலான அன்பு அண்ணனின் அருகே மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, கருணாநிதியின் ஸ்டாலின், கனிமொழி மற்றும் அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்,  மூத்த மகன் மு.க.முத்து நேற்று அஞ்சலி செலுத்தினார். 5-வது நாளான  இன்றும் பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்காண தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தவரும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. தலைவருக்கும் அஞ்சலி செலுத்தவரும் பொதுமக்கள் பசியாற உணவருந்த இந்த "சமாதி சாப்பாடு" என புதிய  டிரெண்ட் உருவாக்கியுள்ளனர் திமுகவினர்.