அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் ரூ.1500... அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக புகார்..!

தேர்தல் விதிகளை மீறி பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது.

dmk complains... AIADMK against minister jayakumar

தேர்தல் விதிகளை மீறி பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. 

தமிழகத்தில் 40 மக்களவை தொகுதிகளுக்கும் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அனைத்து கட்சியினர் வேட்பாளர் அறிவித்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் தேர்தலையொட்டி திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். dmk complains... AIADMK against minister jayakumar

மற்றொரு புறம் தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் ஆணையம், தேர்தல் குறித்தும், பல விதிகளை விதித்துள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவுக்கு வாக்களித்தால் ரூ.1500 கொடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கூறியிருந்தார். இததொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்து தி.மு.க. வழக்கறிஞர் கிரிராஜன் தலைமையில் புகார் அளித்துள்ளார்.

 dmk complains... AIADMK against minister jayakumar

இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. வழக்கறிஞர் கிரிராஜன், அ.தி.மு.க.வுக்கு ஓட்டளித்தால் மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் என மக்களை தூண்டும் வகையில் ஜெயக்குமார் பேட்டி அளித்ததாகத் தெரிவித்தார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இருப்பதை திரித்துக் கூறி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியிருப்பதாகவும் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios