திமுக மீண்டும் ஆட்சி என்பது பகல் கனவு. அது கானல் நீராகதான் இருக்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். “அதிமுக அசைக்கமுடியாத எக்கு கோட்டை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி. அதை மீறி எதுவும் இங்கே நடக்காது. எங்களைப் பொறுத்தவரை கூட்டணி தொடர்பாக பாஜக தலைமை கூறும் கருத்தைதான் ஏற்க முடியும். அங்கிருந்து வந்து செல்வர்கள் கருத்தையெல்லாம் ஏற்க முடியாது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான். இது அதிமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.


திமுக போல மைனாரிட்டி அரசாக தொங்கிக் கொண்டிருந்ததைப்போல அரசை நடத்த மாட்டோம். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். பெரும்பான்மையோடு வருபவர்களால்தான் முதல்வரை முடிவு செய்ய முடியும். அந்த வகையில் அதிமுகதான் வெற்றி பெற்று எடப்பாடி முதல்வராக இருப்பார். உண்மையில் திமுகவை நிராகரிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணமாக உள்ளது. ஏற்கனவே மக்கள் திமுகவை நிராகரித்தும் ஒதுக்கியும் வைத்துள்ளனர்.